Published : 14 Mar 2014 01:25 PM
Last Updated : 14 Mar 2014 01:25 PM
மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் இன்று தங்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்கள்.நாடாளுமன்றத் தேர்தல், வரும் 24ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்துக் கூட்டணிகள் சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த 3ம் தேதி, காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் துவங்கினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று (வெள்ளிக் கிழமை) கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இன்று (வெள்ளிக் கிழமை) கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் மூன்று மணிக்கு பிரச்சாரம் தொடங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டம் வரும் 16ம் தேதி, தி.நகரில் நடைபெற உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வரும் 17ம் தேதி முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இதில் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளிலும், காங்கிரஸ் கட்சியிலும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப் படாததால் தங்களது கட்சி சின்னங்களை மட்டுமே வைத்து, பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT