Published : 17 Feb 2017 07:50 AM
Last Updated : 17 Feb 2017 07:50 AM
அழியும் நிலையில் உள்ள உயிரி னங்களைப் பாதுகாக்கவும், பல்லு யிர் வளங்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ல் வன உயிரினங்கள் எண்ணிக்கை, அவற்றின் முக்கியத்துவம் அடிப் படையில் பட்டியல்-1 முதல் பட்டியல்-6 வரை என வகைப் படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடவோ, வேட்டையாட முயன்றாலோ சட்டப்படி குற்ற மாகக் கருதப்படுகிறது. இந்த 6 வகை பட்டியல்களில் தெரிவிக் கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்களாகக் கருதப்படு கின்றன. இதில், 6-வது பட்டியலில் 6 அரிய வகை தாவரங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அத னால், இந்த 6 தாவரங்களும் பாது காக்கப்பட வேண்டிய வன உயிரி னங்களாகக் கருதப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட வன அலு வலரும், வன உயிரின ஆராய்ச்சி யாளருமான வெங்கடேஷ் கூறிய தாவது:
இயற்கைச் சூழலில் தானாக வளரும் அனைத்து உயிரினங்களை யும் வன உயிரினங்கள் எனலாம். அதனால், வன விலங்குகளைப் போல் வனப் பகுதிகளில் அரி தாகக் காணப்படுவதால் சைகஸ் பெட்டோமி (மதன காமராஜா அல்லது ஏந்த பனை), புளூ வாண்டா, ரெட் வாண்டா, குத், லேடி சிலீப்பர் ஆர்கிட், குடுவை பூச்சி உண்ணும் தாவரம் (குடுவை தாவரம்) ஆகிய 6 வகை அரிய தாவரங்களும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் பட்டியல் 6-ல் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த தாவரங்களைச் சேகரிக்க வேண்டுமெனில் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லா மல் இந்தத் தாவரங்களை வாங் கவோ, விற்கவோ, ஏற்றுமதி செய் யவோ, வீடுகளில் வளர்க்கவோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள் ளது. இந்த தாவரங்களை வீட்டில் வைத்திருப்பதும் குற்றமாகவே கருதப்படுகிறது.
நோய் தீர்க்கும் தாவரம்
சைகஸ் பெட்டோமி தாவரம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மற்றும் கடப்பா மலைப் பகுதிகளில் மட்டுமே உள்ளது. இதில் ஆண் தாவரத்தின் பழங்கள் வாதம், மூட்டு வீக்கம் மற்றும் தசை வலிகளைப் போக்கும் திறன் கொண்டது. நோய்களுக்கு இந்தத் தாவரம் அதிகமாக பயன் படுத்தப்படுவதால் அழிந்து வருகி றது. ஆண்டுதோறும் இந்த மலைப் பகுதிகளைச் சுற்றி தொடர்ச்சியாக ஏற்படும் காட்டுத் தீயாலும் இவை அழிந்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படும் ரெட் வாண்டா தாவ ரத்தின் பூக்கள் பார்ப்பதற்கு அழகாக வும், ரம்மியமாகவும் இருக்கும். குத் தாவரம் காஸ்டல் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. காஷ்மீர் மலைகள் மற்றும் மேற் குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 2,500 முதல் 3,000 மீட்டர் உயரத்தில் வளரும் தன்மை கொண்டது. இத்தாவரத்தின் வேர் பாரம்பரியமாக மருந்து மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக் கவும் பயன்படுத்தப்படுகிறது.
குடுவை என்னும் பூச்சி உண்ணும் தாவரத்தின் இலை ஒரு குடுவை போல் இருக்கும். இதனுள் ஒரு வகை திரவம் நிரம்பியிருக்கும். பூச்சிகள் இந்த தாவரத்தில் அமரும்போது குடுவை போன்ற இலைக்குள் இருக்கும் திரவத்தால் ஈர்க்கப்பட்டு குடுவைக்குள் அந்த பூச்சி வழுக்கி விழுந்துவிடும். மூழ்கும் பூச்சிகள் திரவத்தில் உள்ள வேதியியல் நொதி பொருட்களால் கரைக்கப்படும். இந்த கரைக்கப்பட்ட கரைசல் அமினோ அமிலமாக மாற்றப்படும். இதை தாவரம் தன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள்ளும். இந்தத் தாவரம் காடுகளில் அரிதாக காணப்படு கிறது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT