Last Updated : 23 Mar, 2017 09:27 AM

 

Published : 23 Mar 2017 09:27 AM
Last Updated : 23 Mar 2017 09:27 AM

நவீன தொழில்நுட்பம், ஆதார் எண்ணுடன் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸாருக்கு விரைவில் அடையாள அட்டை வழங்க திட்டம்

போலி போலீஸாரை கண்டறிய நடவடிக்கை

நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆதார் எண்ணுடன் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸாருக்கு புது அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 758 போலீஸார் பணியில் உள்ளனர். காவல் நிலையங்களில் பணி செய்யும் போலீஸார், ஆயுதப்படை, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு, போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, நுண்ணறிவு பிரிவு, உளவு பிரிவு, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு, ‘க்யூ’ பிரிவு என காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இந்த பிரிவுகளில் பணி செய்யும் போலீஸாருக்கு அந்தந்த பிரிவு போலீஸ் அதிகாரிகளே இதுவரை அடையாள அட்டைகளை வழங்கி வந்தனர். காவல்துறையில் பல வகையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதால் காவல்துறை அல்லாத சிலர் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து மோசடி யில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவுக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் பண வசூலில் ஈடுபட்ட போலி போலீஸார் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

போலி போலீஸாரை தடுக்கவும், அனைத்து போலீஸாருக்கும் ஒரே வகையான அடையாள அட்டைகளை வழங்கவும், காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டைகள் வழங்கவும் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து, ஆதார் எண் ணோடு புதிய தொழில்நுட்பத் துடன் போலீஸாருக்கு ஒரே வகை யான புது அடையாள அட்டைகளை தயாரிக்க தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து சென்னை உட்பட அனைத்து மாவட்ட போலீஸ் அதி காரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப் பப்பட்டன. இதைத் தொடர்ந்து புது அடையாள அட்டைக்காக அனைத்து போலீஸாருக்கும் விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட் டுள்ளன. விரைவில் அனைத்து போலீஸாருக்கும் ஒரே வகை யான நவீன தொழில்நுட்பத் துடன் தயாரிக்கப்பட்ட அடை யாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புது அட்டையின் சிறப்புகள்

அனைத்து போலீஸாரும் சீருடையுடன் தலையில் தொப்பி அணியாமல் உள்ள புகைப்படம் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் அடையாள அட்டையில் இருக்கும் உருவத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

மேலும் அடையாள அட்டையில் ரகசிய குறியீடு இருக்கும். அந்த குறியீட்டை ஆய்வு செய்தால் சம்பந்தப்பட்ட போலீஸாரின் பெயர், முகவரி, பணியில் சேர்ந்த காலம், ஓய்வு பெறும் காலம், தற்போது உள்ள பொறுப்பு, ரத்த வகை, அங்க அடையாளங்கள் என அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஆதார் எண்ணும் அதில், இணைக்கப்பட்டிருக்கும். புது அடையாள அட்டையில் மொத்தம் 25 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என சென்னை காவல் ஆணையர் அலுவலக நிர் வாக பிரிவு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x