Published : 20 Apr 2017 09:01 AM
Last Updated : 20 Apr 2017 09:01 AM
தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னை, பனை மரத்தில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆல்கஹால் முற்றிலும் இல்லாத ‘நீரா’ பானத்தையாவது தடையின்றி இறக்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் வலி யுறுத்தி வந்தனர். இந்நிலையில், தென்னை மரத்தில் இரந்து ‘நீரா’ பானம் இறக்கவும், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கவும் அனுமதி அளிப்பது என்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு தென்னை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி விநாயகா தென்னை உற்பத்தி யாளர்கள் நிறுவனத் தலைவர் பி.கே.பத்மநாபன் கூறியதாவது: எங்கள் அமைப்பில் 64 தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள், 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் உள்ளன. 2,167 தென்னை விவசாயிகள் இணைந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டேரில் ஏறத்தாழ 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் 82 ஆயிரம் ஹெக்டேரில் சுமார் 1.5 கோடி மரங்கள் உள்ளன. சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரில் உள்ள தென்னை மரங்களில் உடனடியாக ‘நீரா’ பானத்தை இறக்கலாம்.
முற்றிலும் ஆல்கஹால் இல்லாத ‘நீரா’ பானம் உடல் சூட்டைக் குறைத்து, ஆரோக்கி யத்தை மேம்படுத்தும். காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையம், கொச்சின் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை கண்டுபிடித்துள்ள, நொதிக்காத தன்மையுடைய பதநீருக்கு (நீரா) அனுமதி கோரி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.
நீராவை ஐஸ் பாக்ஸ் முறையில் தயாரித்தால் லிட்டருக்கு ரூ.120-ம், ரசாயனம் கலந்த முறையில் தயாரித்தால் ரூ.60-ம் கிடைக்கும். ஒரு மரத்தில் சுமார் 3 லிட்டர் ‘நீரா’ எடுக்கலாம். காலதாமதமான முடிவு என்றாலும், தமிழக அரசின் இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீராவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கும். நீராவில் இருந்து சர்க்கரை, கருப்பட்டி, குக்கீஸ் உள்ளிட்டவை தயாரித்து, அவற்றின் மூலமும் லாபம் ஈட்டலாம் என்றார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலச் செயற்குழு உறுப் பினர் வெள்ளக்கிணர் வெ.சு.காளிச்சாமி கூறும்போது, “அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலை யில், இயற்கை வழி உணவான, ஊட்டச்சத்து மிக்க நீராவுக்கு அனுமதி வழங்கியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. இதேபோல, தென்னையின் மதிப்பு கூட்டப் பட்ட பொருளான தேங்காய் எண் ணெய்யை ரேஷன் கடைகளில் விற்க வேண்டுமென்ற கோரிக்கை யையும் அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
கள் மீதான தடை
தமிழ்நாடு கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறும் போது, “பதநீர் இறக்குவதற்கு ஏற்கெனவே அனுமதி உள்ளது. நீராவும் பதநீர் போன்றதே. எனவே, புதிதாக அனுமதி கொடுப்பது போல கூறுவது அரசுக்கும், விவ சாயிகளுக்கும் உரிய புரிதல் இல்லை என்பதையே காட்டு கிறது. ரசாயனம் கலந்து நீரா தயாரிப்பதைக் காட்டிலும், கேரள மாநிலத்தைப் போல ஐஸ் பெட்டி யில் பதநீரை இறக்கி, தூய்மையான நீராவைத் தயாரிக்க வேண்டும். இதற்கான பயிற்சியை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT