Published : 31 Aug 2016 12:39 PM
Last Updated : 31 Aug 2016 12:39 PM
மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள், உள்ளாட்சித் தேர்தல் தேதி, வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்பே, தங்கள் வார்டுகளில் செய்த ஐந்தாண்டு சாதனைகளை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஓட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் கடந்த வாரம் திமுக பொருளாளர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தினார். அப் போது, ஸ்டாலினும், அக் கட்சி நிர்வாகிகளும் உள்ளூர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன்பின் ஸ்டாலின் பேசிய அதே இடத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக சார்பில் ‛சட்டமன்றத்தில் தெறித்து ஓடும் திமுகவினர்’ என்ற தலைப்பில் போட்டிப்பொதுக்கூட்டம் நடத்தி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தனர். திமுக, அதிமுகவின் இந்த அரசியல் விமர்சனத்தால், மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல்களம் சூடுபிடி த்துள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சிலர், தங்கள் வார்டுகளில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, குடியிருப்பு பகு திகள், சாலைகளில் வீதிக்கு வீதி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் சாலைப்பணிகள், ரேஷன் கடை கட்டிடம், பாலம் புதுப் பித்தல், அங்கன்வாடி கட்டிடம், ஆழ்குழாய் கிணறு, பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள் உள் ளிட்ட சிறுசிறு பணிகளை கூட பட்டியலிட்டுள்ளனர். மேலும், நடைபெற வேண்டிய பணிகளையும் பட்டியலிட்டு, அதையும் முடிப்பதாக உறுதிய ளித்துள்ளனர். தேர்தல் தேதி, வேட்பாளர் அறிவிக்கும் முன்பே அதிமுக கவுன்சிலர்கள் தாங்கள்தான் மீண்டும் அந்த வார்டுகளில் கவுன்சிலராக போட்டியிடுவோம் என்ற ரீதியில் தற்போதே தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வா கிகள் கூறுகையில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிலருக்கு வார்டுகளையும், கவுன்சிலர் சீட்டு உறுதியெனவும் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர்கள் அந்த தைரி யத்தில் பெண்கள், ஆண்கள் பிரிக் கப்படாதநிலையில் வார்டுகளில் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிட்டிங் கவுன்சிலர்கள் பலர் மீது மக்கள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம். அதனால், புதியவர்களுக்கும், இதுவரை வாய்ப்பே கிடைக்காத சீனியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளதால் தேர்தலுக்கு பின் கட்சித்தலைமை யாரை வேண்டுமென்றாலும் மேயராக அறிவிக்கலாம் என்பதால் கவுன் சிலர் சீட்டுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கட்சி விசுவாசிகள் வெற்றி பெற்றால் மட்டுமே மேயர் தேர்தலில் அவர்கள் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வார்கள். விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் குதிரை பேரங்களுக்கு அவர்கள் விலைபோக வாய்ப்புள்ளது. கவுன்சிலர் வேட்பாளர் தேர்வில் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்கள் என்ற வட்டத்தை தாண்டி தலைமைக்கு விசுமானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், என்றனர்.
மாவட்ட கழக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, கவுன்சிலர் சிலர் சாதனைகளை பட்டியலிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் தாங்கள்தான் வேட்பாளர் என பிரச்சாரம் செய்வதாக அர்த் தமாகிவிடாது. கட்சித் தலைமை அறிவுறுத்தல்பேரில்தான் வேட்பாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள். கவுன்சிலர்களுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு சீட் கிடைக்கக்கூடாது என்பதற்காக அவதூறுகளை பரப்பலாம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT