Published : 03 Jun 2016 03:52 PM
Last Updated : 03 Jun 2016 03:52 PM
படுகாயமடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 17 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு நேற்று பிற்பகல் தனியார் பேருந்து 42 பயணிகளு டன் சென்றுகொண்டு இருந்தது. கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ் சாலையில் குருபரப்பள்ளி அடுத்து மேலுமலை அருகே சென்றபோது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை பாரம் ஏற்றிய லாரி ஒன்று எதிரே வந்துகொண்டிருந்தது. மேலுமலை அருகே, தாழ்வான பகுதியில் லாரி வந்தபோது ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு, எதிர் பாதைக்கு லாரி சென்றது. அப்போது, ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி யது. இதில் தனியார் பேருந் தின் முன்பகுதி முற்றிலும் உருக் குலைந்தது.
தனியார் பேருந்தை பின் தொடர்ந்து வந்த 2 கார்கள், பேருந்து மீது அடுத்தடுத்து மோதின. அப்போது, ஒரு காரின் மீது பேருந்து சாய்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் வந்த பயணிகளில் 9 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இடிபாடு களுக்குள் சிக்கியிருந்த 33 பயணி களை, கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷிணி, கிருஷ்ண கிரி டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீஸார் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்ட 33 பயணிகளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர், வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் 10 ஆண் கள், 12 வயது சிறுமி உட்பட 7 பெண்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன், சேலம் சரக போலீஸ் டிஐஜி நாகராஜன், கிருஷ்ணகிரி எஸ்பி (பொறுப்பு) பண்டி கங்காதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணி களை துரிதப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்
சேலம் மாவட்டம் தாரமங்கலத் தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி அண்ணாமலை மனைவி அஞ்சலா (30), ஓசூர் அலசநத்தத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் பிளஸ் 2 மாணவர் கணேசன் (17), பர்கூர் அருகே உள்ள தேசப்பள்ளியைச் சேர்ந்த கவுரம்மா (55), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிகள் மாதம்மா (40), நிர்மலா(38), பொம்மிடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(40) ஆகிய 6 பேரின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
முதல் இயக்கத்திலேயே விபத்து
கிருஷ்ணகிரி - ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூர் வரை இயக்க ‘பர்மிட்’ பெறப்பட்டுள்ள விபத்துக்குள்ளான பேருந்து, இந்த தடத்தில் 12 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பர்மிட் வாங்கி இருந்தார். நேற்று மதியம் 1.45 மணியளவில்தான் பேருந்து முதல் இயக்கத்தை தொடங்கியது. பேருந்து இயக்கம் தொடங்கிய 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
நிவாரண உதவி
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த லாரி, எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நொறுங்கிய பேருந்து பின்தொடர்ந்து வந்த கார் மீது சாய்ந்தது.
விபத்து நேரிட்டது எப்படி?
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்புறத்தில் கிருஷ்ணகிரி நோக்கி கடலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
குருபரபள்ளி அடுத்த மேடுமலை பகுதியில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது லாரி அதிவேகமாக வந்துள்ளது. சில நிமிடங்களில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பஸ் மீது பாய்ந்தது.
இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. வாகனங்கள் பலமாக மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தது முதற்கட்ட தகவலில் உறுதி செய்யப்பட்டது.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
படங்கள்: எஸ்.கே.ரமேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT