Published : 26 Jun 2017 09:30 AM
Last Updated : 26 Jun 2017 09:30 AM
குற்றாலத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை அகழ்வைப்பகம் மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் பூட்டிக் கிடப்பதால் அதனைப் பார்த்து பயன் பெற முடியாமல் சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், பேருந்து நிலையத்தில் இருந்து பிரதான அருவிக்கு செல்லும் வழி யில் அமைந்துள்ள கொச்சம் பட்டி சத்திரம் எனும் கட்டிடத் தில், தொல்லியல் துறையின் நாட் டுப்புறக் கலை அகழ்வைப்ப கம் உள்ளது. இந்த அகழ் வைப்பகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குற்றாலம் அருகில் உள்ள அழுதகண்ணியாறு, திருமலாபுரம், செந்தட்டியாபுரம், சாயர்புரம் போன்ற ஊர்களில் சேகரிக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. தென்காசி ஆசாத் நகர், கீழ ஆம்பூர் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகளும் உள்ளன.
பெருங்கற்கால பொருட்கள், ஆண்டிப்பட்டியில் சேகரிக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடு மண் பொம்மைகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்தை புதுப்பிக்கும்போது கிடைத்த சுதைச் சிற்பங்களும் உள்ளன. கல்லூரணியில் சேகரிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தேசத்து களிமண் பெண் உருவம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து சேகரிக்கப்பட்ட பித்தளையால் ஆன கால் சிலம்புகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ ஓலைச் சுவடி
பாண்டிய மன்னர்கள் காலத்து செப்பேடு, மருத்துவச் செய்திகள் அடங்கிய ஓலைச் சுவடிகள், ராமா யண ஓவியச் சுவடி போன்றவையும், கோயில்களில் பயன்படுத்தப்படும் விசிறி, குடை, சாமரம், ஆலவட் டம் ஆகியவையும் வைக்கப்பட் டுள்ளன. இவை சங்கரன்கோவிலில் கிடைத்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் ஆகும்.
பழங்குடியின மக்கள் பயன் படுத்திய மர உரல், தேன் குடுவை, வில், எலிப்பொறி, மரத்தால் ஆன கொண்டை ஊசி, ஆங்கிலேயர் காலத்து பீரங்கி குண்டுகள், பூலித் தேவன் பயன்படுத்திய கவண் கற்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.மு. 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முது மக்கள் தாழி முதல் கி.பி.19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பீரங்கிக் கல் குண்டுகள் வரை பல்வேறு காலகட்ட பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த அகழ்வைப்பகம் மாதத்தில் பாதி நாட்களுக்குமேல் பூட்டிக் கிடக்கிறது. தற்போது சாரல் சீஸன் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங் கள், வெளி நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வருகின் றனர். அவர்கள் அகழ்வைப்பகத் தின் போர்டை மட்டுமே பார்த்துச் செல்லும் நிலை உள்ளது. அகழ் வைப்பகத்தின் உள்ளே வைக்கப்பட் டுள்ள பொருட்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் ஏராளமா னோர் ஏமாற்றத்துடன் சென்றுள்ள னர்.
இந்த அகழ்வைப்பகத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணிபுரிகிறார். அவர், மாதத்தில் ஒரு வாரம் பாளையங்கோட்டையில் உள்ள தொல்லியல் அலுவலகத்திலும், ஒரு வாரம் கன்னியாகுமரியில் உள்ள தொல்லியல் அலுவலகத்திலும் கூடு தல் பணியை கவனிக்கச் சென்று விடுகிறார். அந்தவேளையில் அகழ்வைப்பகம் பூட்டிக் கிடக்கிறது.
காலியாக உள்ள பணியிடங் களுக்கு ஊழியர்களை நியமித்து, குற்றாலத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை அகழ்வைப்பகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணி கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்பு கேள்விக்குறி
இந்த அகழ்வைப்பகத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. வரலாற்றை பறைசாற் றும் இங்கு உள்ள பொருட்கள் விலைமதிப்பற்றவை. சமூக விரோதி கள் எளிதில் உள்ளே புகுந்து இங்கு உள்ள பொருட்களை திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை வட்டாரங்களில் கேட்டபோது, ‘காலியாக உள்ள பணியிடங்களின் விவரம் குறித்து தமிழக அரசுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்தி உள்ளனர். அதன்படி, காலிப் பணி யிடங்களை நிரப்ப அரசு நட வடிக்கை எடுக்கும் என எதிர்பார்க் கிறோம்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள மரத்தாலான கொண்டை ஊசிகள், வேட்டை வில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT