Published : 24 Jan 2017 10:04 AM
Last Updated : 24 Jan 2017 10:04 AM
ஜல்லிக்கட்டு விவகாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உலகிலேயே முதல்முறையாக காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் விரைவில் விற்பனைக்கு வருகிறது. முதல்கட்டமாக 50 ஆயிரம் நகைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி வாட்டும் குளிரில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லட்சணக் கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என திரண்டு அறவழியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இந்தியாவையே திரும்ப பார்க்க செய்தது.
தமிழ்நாடு முழுக்கக் கொழுந்து விட்டு எரிந்த இந்தப் போராட் டத்தைத் தமிழக முதல்வர் ஓ. பன் னீர்செல்வம் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தமிழக அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும், நிரந்தர தீர்வைக் கோரி போராட் டங்கள் தொடந்து நடைபெற்றன. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்க, வைர, வெள்ளி ஆபரணங் களைத் தயாரிக்க நகை கடை உரிமையாளர்கள் முடிவு செய்து, முதல்கட்டமாக சுமார் 50 ஆயிரம் ஆபரணங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: மக்களின் ரசனை மற்றும் விருப்பத்துக்கு ஏற்றவாறு தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களைத் தயாரித்து வருகிறோம். தமிழகத்தில் நடந்துவரும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பில் கலந்து கொண்டோம். ஏற்கெனவே, தமிழகத்தின் பாரம் பரியத்தை உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் தங்கம், வைர கம்மல், மோதிரம், செயின், வளையல் விற்பனை செய்து வருகிறோம். மேலும், பிரபல நடிகர்கள், அரசியல் கட்சி தலை வர்கள் உருவம், சின்னம் பொறித்த தங்கம் மற்றும் வைர நகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். குதிரை, யானை, மயில் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட நகைகள் தற்போது விற்பனையில் உள்ளன.
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு வகை நாட்டு காளைகளின் மாதிரி உருவம் பொறிக்கப்பட்ட மோதிரம், டாலர்கள், பிரேஸ்லெட், செயின் என முதல்கட்டமாக 50 ஆயிரம் ஆபரணங்களைத் தயாரிக்க உள்ளோம். மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். ஆரம்ப விலை ரூ.4 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் வரையில் இருக்கும். இந்த வகை ஆபரணங் களை விற்பனை செய்யும்போது பல்வேறு சலுகைகளையும் அறிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT