Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
தென்காசி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து, சங்கரன் கோவிலில் புதன்கிழமை நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசிய தாவது: கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மேற்கொண்ட நடவடிக்கை களால், தற்போது கூடுதலாக 2,500 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு மின்வாரியம் மூலம் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உப்பூர் அனல்மின் திட்டம் தொடர்பாக விரைவில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி 4-ம் அனல்மின் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு மறுத்துவிட்டது. அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்ததும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
பெட்ரோல் விலையை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதால் மாதம் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மீனவர் பிரச்சினை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கிடு, கச்சத்தீவு பிரச்சினை, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினை போன்றவற்றில், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது.
இலங்கையில் இனப்படு கொலை செய்தவர் களை தண்டிக் கவும், தனித் தமிழ் ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், கச்சத்தீவை மீட்கவும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமை யாக பின்பற்றவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போது ஏன் வலியுறுத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவருக்கு முக்கிய மில்லை. மகளுக்காக காங்கிரசிடம் மடிப்பிச்சை ஏந்தியவர் கருணாநிதி. தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ண சாமியும் இது போன்றவர் தான். எங்கு சீட் கிடைக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து விடுவார். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT