Published : 10 Sep 2016 10:33 AM
Last Updated : 10 Sep 2016 10:33 AM
ஹோட்டல்களுக்கு வெளியே வைக் கப்படும் ’இன்றைய ஸ்பெஷல்’ பலகைகளில் அன்றைய தின உணவு ரகங்களின் பட்டியலைப் பார்த்திருப்போம். ஆனால், கும்ப கோணம் வெங்கட்ரமணா ஹோட்ட லில் தினமும் ஓர் அரிய தகவலை ஓவியமாகவும் வரைந்து வைக் கிறார்கள்.
கும்பகோணம் காந்தி பூங்கா வடக்கில் உள்ள வெங்கட்ரமணா ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறவர் கள் ஹோட்டல் வாசலில் எழுதி வைக்கப்பட்டுள்ள இன்றைய ஸ்பெஷலை படிக்கிறார்களோ இல்லையோ, அந்தப் பலகையில் உள்ள ஓவியத்தையும் அது சொல் லும் சேதியையும் உள்வாங்காமல் நகருவதில்லை. கவனத்தை ஈர்க் கும் இந்த ஓவியங்களின் படைப் பாளி நா.ராஜேந்திரன் - பிரபல ஓவியர் சித்ரலேகா (எ) நாராயண சாமியின் மகன்.
பி.ஏ, படித்துக் கொண்டிருந்த போதே தந்தையிடம் ஓவியம் கற்ற ராஜேந்திரன், கடந்த 40 வருடங்களாக ஓவியராய் தனது பயணத்தைத் தொடர்கிறார். இவர் எப்படி ஹோட்டல் ‘மெனு’ பலகைக்கு ஓவியரானார்?
இதுபற்றி ஹோட்டல் உரிமை யாளர் எம்.பாலச்சந்திரன் கூறிய தாவது: “தினமும் எங்களது ஓட்டலின் ‘இன்றைய ஸ்பெஷல்’ வகைகளைப் பலகையில் எழுதி வைப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் தேடினோம். அப்போது தான், ராஜேந்திரனைப் பற்றிச் சொன் னார்கள். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் மறுக்காமல் ஒத்துக் கொண்டார். வெறும் ‘மெனு’வை மட்டும் எழுதிப் போடாமல் பழைய வரலாற்றுச் சம்பவங்களை ஓவியமாக வரைந்து அதற்கு இரண்டொரு வரியில் விளக்கம் கொடுத்த ராஜேந்திரனின் ஐடியா வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதை அப்படியே தொடர ஆரம்பித்து விட்டார். கடந்த 9 வருடங்களாக எங்களது ஹோட்டல் வாசலில் அவரது ஓவியங்கள் தினம் ஒரு பயனுள்ள தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது” என்கிறார் பாலச்சந்திரன்.
ஓவியத்தில் செய்தி சொல்லும் ராஜேந்திரனுக்கு மாதம் இரண்டாயி ரம் ரூபாய் ஊதியம் தருகிறது ஓட்டல் நிர்வாகம். ‘‘சம்பளம் பெரிய விஷயமில்லைங்க. நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை ஓவிய வடிவில் சுதந்திரமாகச் சொல்ல முடிகிறது. காலையில 9 மணிக்கு வந்தேன்னா ஒரு மணி நேரத்துல ஓவியம் வரைஞ்சு முடிச்சுருவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவ நானே இந்தப் பலகையை கருப்புப் பெயின்ட் அடித்து புதுப்பிச்சுக்குவேன்.
ஓவியம் வரைந்து சேதி சொல்வ தற்காக பழைய வரலாற்று நிகழ்வுகள், அரசியல், சங்கீதம், இதிகாசம், இலக்கியம், சம்பந்தப் பட்ட ஏராளமான தகவல்களைத் திரட்டி வைச்சிருக்கேன். அதிலுள்ள தகவல்களைத்தான் தினமும் ஓர் ஓவியமா வரையிறேன்.
எங்காவது வெளியூர் போனா ரெண்டு, மூணு நாளைக்கான ஓவியங்களை சார்ட்டில் வரைந்து குடுத்துட்டுப் போயிருவேன். நான் ஊர் திரும்பும்வரை அந்த ஓவியங் களில் தினம் ஒண்ணா எடுத்து பலகையில் ஒட்டிருவாங்க. நம்மா ளுங்க, ஓவியத்தைப் பார்த்து செய் தியைப் படிச்சுட்டுப் போவாங்க. சுற்றுலா வர்ற வெள்ளக்காரங்க பலகைக்குப் பக்கத்துல நின்னு போட்டோ புடிச்சிட்டுப் போவாங்க. எப்பவாச்சும் இந்தக் காட்சிகளைப் பாக்குறப்ப எனக்கு நானே பெருமைப்பட்டுக்குவேன்’’ என்கிறார் சித்ரலேகாவின் சித்திர வாரிசு ராஜேந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT