Published : 30 May 2017 11:55 AM
Last Updated : 30 May 2017 11:55 AM
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கண்டித்து ஓட்டல் உரிமையாளர்கள் இன்று (மே 30) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரண ஓட்டல்கள் அனைத்துக்கும் 5 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கக் கூடாது என்றும், ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில் 12 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு இதுவரை 0.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஓட்டல்களுக்கான வரி 2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6 மடங்கு உயர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 8 சதவீதமாக இருந்த வரி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வரி உயர்வு அமலானால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று
ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் சீனிவாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT