Published : 28 Apr 2017 10:31 AM
Last Updated : 28 Apr 2017 10:31 AM
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத் தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள் ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக 5 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர் கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. நாட் டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் இரண்டா வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அடியோடு பொய்த்தது. இதனால், பெரும்பாலான உப்பு உற்பத்தியாளர்கள் டிசம்பர் மாதத் திலேயே உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி னர். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே உப்பு உற்பத்தி தொடங்கியது. மேலும், கோடை மழை இல்லாமல் மார்ச் மாதம் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால், உப்பு உற்பத்திக்கு சாதகமான நிலை ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலுடன், அனல் காற்றும் வீசுவதால் உப்பு உற்பத்தி நன்றாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது:
விற்பனை மந்தம்
வழக்கமாக மார்ச்- ஏப்ரல் மாதங் களில் 5 முதல் 7 சதவீதம் வரைதான் உப்பு உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு 10 சதவீதத்தைத் தாண்டியுள் ளது. சுட்டெரிக்கும் வெயில் மற்றும் லேசாக வீசும் காற்று காரணமாக உப்பின் தரமும் நன்றாக இருக்கி றது. மே மாதம் மத்தியில் காற்று மேலும் வேகமாக வீசத் தொடங் கும். அப்போது உப்பு உற்பத்தி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், விற்பனையும், ஏற்றுமதி யும் கடுமையாக சரிந்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து ஆண்டு தோறும் 2 லட்சம் டன் முதல் 3 லட்சம் டன் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும். கடந்த சில ஆண்டு களாக ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது. 2016- 2017ம் நிதியாண்டில் 60 ஆயிரம் டன் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளது.
மேலும், தூத்துக்குடி உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்லும். தற்போது குஜராத் மாநில உப்பு வருகையால், தூத்துக்குடி உப்பு அங்கு செல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. தேவை குறைந் துள்ளதால் கடந்த ஆண்டு உற்பத்தி யில் 2.5 லட்சம் டன் வரை கையிருப் பில் உள்ளது. இந்த ஆண்டு இது வரை 2.5 லட்சம் டன் வரை உற்பத்தி யாகி உள்ளது. எனவே, 5 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது.
இதன் காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு டன் உப்பு ரூ.700 முதல் ரூ.800 வரை விலை போனது. தற்போது ரூ.400 முதல் ரூ.500 வரைதான் விற்பனையாகிறது. இருப்பினும் உற்பத்தி நன்றாக இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் இல்லை. வரும் நாட்களில் உப்பு தேவை அதிக ரித்து, விலை உயரும் என்ற நம்பிக் கையில் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT