Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பில், இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாருக்கு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், “இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தி பொதுமக்களிடம் நம்மாழ்வார் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் தொழிலை செய்தால் கேவலம் என்ற
நிலையை மாற்றி இளைஞர்களும் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். மண்ணை நேசிக்கும் இளைஞர்களுக்குத்தான் திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்” என்றார்.
நிகழ்ச்சிக்கு பின், சீமான் அளித்தபேட்டியில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. எந்த கட்சியையும் ஆதரிக்கவும் இல்லை. யாருடன் யார் கூட்டு சேரப்போகிறார்கள் என்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவுள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். ஆனால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டால் அந்த கட்சி டெபாசிட் தொகையைகூட பெறமுடியாத நிலை ஏற்படும். இதனால் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வது நேரத்தை வீண் செய்வதாக அமையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT