Published : 26 May 2017 11:22 AM
Last Updated : 26 May 2017 11:22 AM
பல் சிகிச்சை பிரிவு அழகுப் படுத்தும் சிகிச்சைக்கான பட்டி யலில் இடம்பெற்றுள்ளதால் இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன்பெற முடியாமல் நோயாளிகள் பாதிக்கப் படுகின்றனர்.
மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் இளம்வயதிலேயே பற்கள் வலுவிழந்து சொத்தையாகி அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பல் பிரச்சினைகள் தொடர்பான முழு மையான சிகிச்சைகள் அளிக்கப் படுவதில்லை.
மதுரை அரசு மருத்துவ மனையில் நேற்று நோயாளிகளுக்கு செயற்கை பல், இடைவெளியை அடைப்பது போன்ற சிகிச் சைகளுக்கான ‘செராமிக் லேப்’ தொடங்கப்பட்டுள்ளது. அதுவும், வாரத்தில் 6 பேருக்கு மட்டுமே இந்த சிகிச்சைகளை அளிக்கக்கூடிய வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்து வமனைகளில் இந்த சிகிச்சைகள் முழுமையாக கிடைக்காத நிலையில், தனியார் இன்சூரன்ஸ் திட்டத்திலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் பல் சிகிச்சை பெறுவோரால் பயனடைய முடி யவில்லை. பல் சிகிச்சை பிரிவை அழகு சிகிச்சை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு பல்லை அடைக்கவும், செயற்கை பல் பொருத்தவும், வேர் சிகிச்சை அளிக்கவும் குறைந்தப்பட்சம் 1,000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதனால், சாமானியர்கள், தனி யார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடி யாமல் பல் வேதனையுடனும், அரை குறை பற்களுடனும் வாழ்க்கையை நடத்துகின்றனர். குறிப்பாக நடுத்தர, ஏழை நோயாளிகள், பல் மருத்துவத்தில் உயர் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் சிலர் கூறியது: மதுரை அரசு மருத்து வனையில் ஏற்படுத்தப் பட்டுள்ள செராமிக் பல் ஆய்வகத்தில் சிகிச்சை அளிக்க குறைந்தபட்ச கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. நாளொன்றுக்கு ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், பலர் இச்சிகிச்சையை பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். பதிவு மூப்பு அடி ப்படையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், கிராம ப்புறங்களில் இருப்பவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு வருவது சிரமமான காரியம். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பல் சிகிசைக்காக தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய உள்ளது.
எனவே, தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் தொழி லாளர்கள், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும், தனியார் இன்சூரன்ஸ் திட்டத்திலும் பல் மருத்துவ சிகிச்சையை முழுமையாக சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக பல் மருத்துவர்கள் கூறியது:
பல் வேர் சிகிச்சை (ரூட் கேனல் ட்ரீட்மெண்ட்), செயற்கை பல் கட்டுவது, பல் இடைவெளியை நிரப்பி கேப் மாட்டுவது, உடைந்த பற்களை சரி செய்யும் லேசர் சிகிச்சை, பற்களை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள், அழகு சிகிச்சை பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் இந்த சிகிச்சைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் தனியார், இன்சூரன்ஸ் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு பெற முடியவில்லை. இந்த சிகிச்சைகள் உயிர் காக்கும் சிகிச்சை இல்லை என்பதால், காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
அதே சமயம், பல் மருத்துவம் முற்றிலுமாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இடம்பெறவில்லை என்று கூறிவிட முடியாது. விபத்துகளில் தாடை எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான சிகிச்சையை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடுகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT