Published : 04 Sep 2016 11:44 AM
Last Updated : 04 Sep 2016 11:44 AM
மேற்குத் தொடர்ச்சி மலை அமைந் துள்ள தமிழகக் காடுகளில் பரவ லாக 3,250 முதல் 3,750 யானை கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானை அறிவு நுணுக்கம் படைத்த விலங்கு. தன்னுடைய வாழ்வில் ஏற்படும் சங்கடம், மகிழ்ச்சி, கோபம், அன்பு ஆகியவற்றை வெளிப்படுத் தும் ஆற்றல் பெற்றவை. தன் இனத்தில் மரணம் ஏற்பட்டால் மனிதர்களைப்போல் கண்ணீர் சிந்தி அழும். குழந்தைகள் போன்ற இந்த யானைகள் சமீப காலமாக விவசாயிகளுடைய பரம எதிரியாக சித்திரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி களில் சுற்றுலா நகரங்கள் வளர்ச்சி, வாழ்விடம் ஆக்கிரமிப்பு, வழித்தடங் கள் மறைப்பு, வனப்பகுதியில் தீவனம், தண்ணீர் தட்டுப்பாட்டால் யானைகள் சமீப காலமாக அடிக் கடி காடுகளை விட்டு வெளியே வருகின்றன. யானைகள் கூட்டம் வயலுக்குள் புகுந்துவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் விவசாயிகளின் பல மாத உழைப்பை வீணாக்கும் வகையில் பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் அழித்துவிடும்.
யானைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் பறையடிக்கிறார்கள், தீப்பந்தம், பட்டாசு வெடிக்கிறார்கள். வனத் துறையும் காடுகளைச் சுற்றி மின் வேலி அமைத்தும், அகழிகள் தோண்டியும் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், விவ சாயிகள், வனத்துறையினரின் இந்த முயற்சி, யானைகள் வெளியேறு வதை தடுக்க முடியாததால் யானை- மனித மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தென்னாப் பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தேனீக்களை கொண்டு காடுகளில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுத்து பயிர்களைக் காப்பாற்றும் உத்தியை அங்கு உள்ள விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த முறையைப் பின்பற்றுவது சாத்தி யமா என ஆராய்ந்து விவசாய நிலங்களில் யானைகள் புகுவதைத் தடுப்பதற்காக விவசாயிகளுக்கு உதவ வனத்துறை, வேளாண் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சன் கூறியது: பொதுவாக தேனீக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானைகள் நடவடிக்கைகளை குறைக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் யானை கள், காட்டு மாடுகளால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். யானை களுக்கு தேனீக்கள் மீது உள்ள அச்சத்தை உணர்ந்த அங்கு உள்ள விவசாயிகள், மலையடிவாரம், பட்டா நிலங்கள் ஆரம்பிக்கும் இடங்களில் 2 மரங்களுக்கு இடைப் பட்ட இடங்களில் கயிறு கட்டி தேனீ வளர்ப்பு பெட்டிகளை தொங்க விடுகின்றனர். யானைகள் வரும்போது, பெட்டிகளில் இடித்து விட்டாலோ, தட்டிவிட்டாலோ பெட்டி களில் இருந்து புறப்படும் தேனீக்கள் தன்னை யாரோ தாக்க வருவதாகக் கருதி, யானைகளின் தும்பிக்கை, காது, முகம் பகுதிகளில் கொட்டும். வலி பொறுக்க முடியாமல் யானை கள் காடுகளை நோக்கி ஓடும். மீண்டும் அப்பகுதிகளுக்கு வராது.
தமிழக வனப் பகுதிகளில் யானைகள் வருவதைத் தடுக்க செலவிடும் ஒரு பங்கு தொகையில் இந்த தேனீ வளர்ப்பில் செலவழித் தால் குறைந்த செலவில் விவசாயி களுக்கு தொந்தரவை கொடுக்கும் யானை நடமாட்டத்தை குறைக்க லாம். தேனீக்களை வளர்ப்பதால் மகரந்த சேர்க்கை மூலம், இரட்டிப்பு மகசூலும் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பிலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் கூறியது: யானைகளும், தேனீக்களும் என்ற இந்தத் திட் டத்தை முதலில் உருவாக்கியவர் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லூசி. பல ஆண்டாக யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு தேனீக்களுக்கு யானை கள் பயப்படுவதை கண்டு பிடித்து, இந்தத் திட்டத்தை செயல் படுத்தினார். இதற்கு வனத்துறை தனியாக அனுமதி வழங்க முடியாது. விவசாயிகள் அவர்களே செய்து கொள்ளலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT