Published : 18 Sep 2016 08:56 AM
Last Updated : 18 Sep 2016 08:56 AM
சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு கால்வாய்களில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததும், நீர் செல்ல வழியில்லாமல் போனதும்தான் முக்கிய காரணம் என்று மாநகாரட்சி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் வடசென்னை பகுதியில் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது, கால்வாய்களில் மிதக்கும் கழிவு பொருட்கள், அதில் வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைச் செடிகள், நீர் வழிந்தோடாமல் தேங்கியிருப்பது போன்றவற்றால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கால்வாய்களை தூர்வாரி, மழைநீர் எளிதில் வழிந்தோட செய்யவும், கொசுக்களை ஒழிக்கவும் ஒரு இயந்திரம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய மாநகராட்சி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன்பு பின்லாந்து நாட்டுக்கு உயரதிகாரிகளை அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் நில, நீர் தூர்வாரும் இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளது. இந்த நவீன இயந்திரம் தற்போது கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் சோதனை அடிப்படையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இது நிலத்திலும், நீரிலும் தூர்வாரும் தன்மை கொண்டது. மேலும் நீரில் மிதக்கும் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைச் செடிகளையும் எளிதில் அகற்றக்கூடியது.
இது மட்டுமல்லாது, நீரில் உள்ள கொசுப் புழுக்களை அழிப்பதற்கு மருந்து தெளிக்கும் வசதியும் இதில் உள்ளது. நீண்ட காலமாக, மிதவைகள் மீது இயந்திரங்களை ஏற்றி தூர்வாரியும் வருகிறோம். இந்த முறை மிகவும் சிக்கலானது. நீரில் கவிழ்ந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆனால் இந்த நவீன இயந்திரத்தை நீரிலும், நிலத்திலும் கையாள் வது எளிது. கொசுக்களையும் அழிக்க பயன்படுவது கூடுதல் சிறப்பு. இதன் சாதக, பாதகங்கள், பழுது ஏற்பட்டால் அதை நீக்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்து, திருப்தி ஏற்படுமானால், தேவைக்கேற்க கூடுதல் இயந்திரங்கள் வாங்கப்படும். மேலும் சிறு கால்வாய்களில் இயங்கும் விதமாக ரூ.18 கோடி மதிப்பில் 3 நவீன சிறிய ரக இயந் திரங்களை பின்லாந்து நாட்டிலிருந்து வாங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT