Published : 03 Jan 2017 09:39 AM
Last Updated : 03 Jan 2017 09:39 AM

சட்ட சிக்கல்களுக்கு இடையேயும் அலங்காநல்லூரில் புதுப்பொலிவு பெறும் ஜல்லிக்கட்டு வாடிவாசல்

பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு நடக்குமா நடக்காதா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க மற் றொருபுறம் மதுரை அருகே உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக அந்தக் கிரா மத்தின் வாடிவாசலுக்கு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்ட கிராமங்களில் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு களைகட்டும். இதில் மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு விளையாட்டை காண, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.16-ஆம் தேதி நடக்கும். நீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண் டாக, அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டு நடக்கவில்லை. இந்த ஆண் டும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என, காளைகளின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால், பொங்கல் பண் டிகை நெருங்கிவிட்டபோதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் தற்போதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஆதங்கம், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போரிடையே ஏற்பட் டுள்ளது. அதனால், கடந்த இரண்டு மாதமாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் கிராமங் களில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர் வலர்கள், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு நடத்த போராட்டங்களை அறிவித்துள்ளன. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 3-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடக்கி றது. ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்க திமுகவினர், தென் மாவட் டங்களில் முழுவதும் இருந்து கட்சியினரை தாண்டி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போரை கிராமம், கிரா மமாக சென்று திரட்டி வருகின் றனர். ஸ்டாலினைத் தொடர்ந்து விஜயகாந்த், ஜி.கே.வாசனும் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்துள்ளதால் ஜல்லிக்கட்டு மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அலங்காநல் லூரில் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வதுபோல் வாடிவாசல் புதுப் பொலிவுப்படுத்தப்படுகிறது. வாடிவாசல் சுவரில், ‘காளையை அடக்கும் வீரர்’ போல் வர்ணம் தீட்டப்படுகிறது. மாடுகளை அடைத்து வைக்கப்படும் வாடி வாசல் படி சுவர்களும் வெள்ளை யடிக்கப்பட்டு அழகுப் படுத்தப் படுகின்றன.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல் லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், மு.க.ஸ்டாலின் ஜல் லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரு கிறார். அவரது வருகைக்கும், வாடிவாசல் புதுப் பொலிவுப்படுத் தப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாரம்பரியமாக நடக்கும் விளையாட்டு என்பதால் ஜல்லிக் கட்டு நடக்கிறதோ, நடக்கவில் லையோ வாடிவாசலை ஆண்டு தோறும் புதுப்பிப்போம். அலங்கா நல்லூரில் மட்டும் 1000 காளைகள் இருக்கின்றன. ஜல்லிக்கட்டு தடை நீங்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த காளைகளைத் தயார்ப்படுத்தி வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x