Published : 27 Jun 2016 11:37 AM
Last Updated : 27 Jun 2016 11:37 AM
வளைகுடா நாடுகளில் ரோஜா பூக்களின் தேவை குறைந்து ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் திறந்த வெளி சாகுபடி, பசுமைக் குடில் சாகுபடியில் ரோஜா விவ சாயம் செய்கின்றனர். இந்தியாவில் ரோஜா பூக்கள் உற்பத்தியில் தமிழ கம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின் றன. தமிழகத்தில் ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில குளிர் பிர தேசங்களில் பசுமைக் குடில்களில் (கிரீன் ஹவுஸ்) ஏற்றுமதி ரக ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. உள்நாட்டில் பூக்களின் தேவை அதிகரித்தாலும், ரோஜா பூக்களின் விலை சர்வதேசச் சந்தையை பொறுத்தே நிர்ணயம் செய்யப்படு கிறது. துபாய், ஈரான், உக்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்தி ரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், தமிழகத்தில் இருந்து மாதந்தோறும் 10 லட்சம் முதல் 15 லட்சம் ரோஜா பூக்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் உள்நாட்டு, வெளி நாட்டுச் சந்தைகளில் தமிழக ரோஜா பூக்களுக்கு வரவேற்பு இல்லாமல், ஏற்றுமதி குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த மாதம் 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரோஜா பூக்களை விவசாயிகளிடம் வியாபாரிகள் ரூ.140-க்கு கொள்முதல் செய்தனர். தற்போது ரூ.30 முதல் ரூ.40-க்கு பெற்று போக்குவரத்துச் செலவு, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி உள் ளிட்ட செலவுகளை சேர்த்து வியா பாரிகள் ரூ.70-க்கு விற்கின்றனர். அதனால், தற்போதைய ரோஜா சந்தை நிலவரம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்க வில்லை. மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் ஒரு பஞ்ச் ரோஜா பூக்கள் ரூ.70-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ரோஜா வியாபாரி கள் கூறியதாவது: தற்போது, வளை குடா நாடுகளில் மக்கள் ரம்ஜான் பண்டிகைக்கான ஆயத்தங்களில் உள்ளதால், அங்கு ரோஜா பூக்க ளின் தேவை பெருமளவில் குறைந் துள்ளது. தமிழக ரோஜா கேரளா வுக்கு அதிக அளவு விற்பனைக்கு அனுப்பப்படும்.
ஆனால், கேரளாவிலும் முஸ்லிம் மக்கள் அதிக மாக இருப்பதால், அங்கும் விற் பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது முகூர்த்த நாட்களும் இல்லாததால், சர்வதேச சந்தை மட்டுமில்லாது உள்நாட்டு சந்தை யிலும் ரோஜா பூக்களுக்கு வர வேற்பு பெரிதும் குறைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர்.
விவசாயிகள் பூக்களை சேமித்து வைக்க, ரோஜா சாகுபடி அதிகம் நடக்கும் பகுதிகளில், குளிர்பதனக் கிடங்கு வசதி, ஏற்றுமதி மண்டலம் இல்லாததே ரோஜா விவசாயம் அழிவுக்கு முக்கியக் காரணம். ஏற்றுமதி மண்டலம் அல்லது குறைந்தபட்சம் ஏற்றுமதி தகவல் மையம் அமைந்தால், விவசாயிகள் பூக்களை வியாபாரிகளிடம் விற்கா மல், நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். குளிர்பதனக் கிடங்கு அமைந்தால் பூக்களை சேமித்து வைத்து, விலை கூடுதல் ஆகும் நாட்களில் நல்ல விலைக்கு விற்கலாம். இதன்மூலம் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT