Published : 02 Mar 2017 08:45 AM
Last Updated : 02 Mar 2017 08:45 AM
கிராமப்புற மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அடுத்த நிதி யாண்டில் 30 மைக்ரோ அலுவல கங்களைத் திறக்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் திட்டமிட் டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந் தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், சர் தோரப்ஜி டாடா என்பவரால் 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1973-ம் ஆண்டு தேசியமாக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்துக்கு 2,097 அலுவலகங்கள் உள்ளன. இதைத் தவிர, 28 நாடுகளில் கிளைகள் உள்ளன. மோட்டார் வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் திருட்டு, தீப்பிடித்தல், மருத்துவம், பொறியியல் இயந்திரங்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்நிறுவனம் காப்பீடு வழங்கி வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக வரும் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் கூடுதலாக 30 மைக்ரோ அலுவலகங்களைத் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஜே.ஜெயந்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் பொதுமக்களின் உடமை களுக்கு பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் பிராந்திய அலு வலகங்கள் உள்ளன. இதில் சென்னை பிராந்திய அலுவலகத் தின் கீழ் 25 மண்டல அலுவலகங்கள், 24 கிளை அலுவலகங்கள், 62 மைக்ரோ அலுவலகங்களும், கோயம்புத்தூர் பிராந்திய அலுவலகத்தின் கீழ் 14 மண்டல அலுவலகங்கள், 17 கிளை அலுவலகங்கள், 46 மைக்ரோ அலுவலகங்களும், மதுரை பிராந்திய அலுவலகத்தின் கீழ் 15 மண்டல அலுவலகங்கள், 17 கிளை அலுவலகங்கள், 68 மைக்ரோ அலுவலகங்களும் உள்ளன.
கடந்த 2015-16ம் நிதியாண்டில் 14.08 லட்சம் காப்பீடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம், ரூ.810 கோடி பிரீமியம் தொகை வசூலானது. மேலும், 98,104 கிளெய்ம்கள் செட்டில் செய்யப் பட்டுள்ளன. 2016-17ம் நிதியாண் டில் 83 ஆயிரத்து 520 கிளெய்ம்கள் செட்டில் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வீசிய வார்தா புயல் மற்றும் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பலர் தங்களது உடமைகளை இழந்தனர். ஆனால், பலர் தங்களது உடமைகளுக்கு போதிய அளவு காப்பீடு எடுக்காத தால் பெரும் நஷ்டத்தைச் சந்தித் தனர். இந்த சம்பவத்தையடுத்து தற்போது அவர்களுக்கு காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. இதனால் காப்பீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே பொதுமக்களின் வசதிக்காக அடுத்த நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 30 மைக்ரோ அலுவலகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வசதிக்காக இந்த அலுவலகங்கள் செயல்படும். கிராமப்புற மக்கள் புதிதாக பாலிசி எடுக்கவும், பிரீமியம் கட்டவும் இந்த அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT