Published : 19 Apr 2014 10:11 AM
Last Updated : 19 Apr 2014 10:11 AM
இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
பாஜக-வை ஆதரிப்பதற்காகவே கம்யூனிஸ்டுகளை அதிமுக கழற்றி விட்டதாக குற்றம்சாட்டினீர்கள். இப்போது பாஜக-வை ஜெயலலிதா கடுமையாக விமர்சிக்கிறாரே?
பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் கண்ணில் தென்பட்ட காவிரி மற்றும் அமராவதி ஆறுகளை பார்த்துவிட்டு முதல்வர் பேசுகிறார். ஆனால், பாஜக ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன் னதையும் காங்கிரஸின் அதே பொருளா தார கொள்கையை அமல்படுத்துவோம் என்று கூறுவதையும் விமர்சிக்கவில்லை. எனவே பாஜக-வை விமர்சிப்பதுபோல் அதிமுக நாடகமாடுகிறது.
இடதுசாரிகளைப் போலவே காங்கிரஸும் பாஜகவும் வெற்றிபெறக்கூடாது என்கிறார்களே?
இடதுசாரிகள் மாற்று கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். மாற்றுக் கொள்கை என்ன என்று கூறாமல் திமுக-வும் அதிமுக-வும் அவர்களை விமர்சிப்பது தாய் குழந்தையை செல்ல மாகக் கண்டிப்பதுபோல்தான். திமுக-வும் அதிமுக-வும் காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் பொருளாதார கொள்கையைதான் தாங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்து கிறோம் என்று கூறுவதற்கு வெட்கப்படு கிறார்கள். எனவே ஒருவர் மீது ஒருவர் மாறி குற்றம் சொல்லி இதை மாநில தேர்தலாக மாற்றப் பார்க்கிறார்கள்.
மோடி என்ற தனிநபரை முன்னிலைப் படுத்தி தேர்தலை சந்திக்கிறதே பாஜக?
பாஜக-வுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை. எனவே பெரும் முதலாளிகளின் ஊடகங்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ். பற்றிபேசாமல் மோடி என்ற தனி நபரை முன் நிறுத்துகின்றன.
காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் பொரு ளாதார கொள்கையில் வித்தியாசம் இல்லையென்றால், ஏன் பெரும் முதலாளி கள் மோடியை ஆதரிக்க வேண்டும்?
உலகில் தாராளமய, சந்தைப் பொரு ளாதார கொள்கைகளை அமல்படுத்தும் எந்த கட்சியும் மக்களின் நல்லெண் ணத்தை இழந்துவிடும். அமெரிக்காவி லும் இங்கிலாந்திலும் இதேதான் நடந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி நல்லெண்ணத்தை இழந்துவிட்டது. எனவே, அதே பொருளாதார கொள்கை களை கொண்ட, குஜராத்தில் தங்களுக்கு வாரி வழங்கிய, வலதுசாரி கருத்துகளை கொண்ட மோடியை பெருமுதலாளிகள் ஆதரிக்கிறார்கள்.
அதிமுக கூட்டணியிலிருந்து வெளி வந்தது குறித்து?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று அதிமுக உணரவில்லை. இது அதிமுக-வுக்குத்தான் எதிர்பாராதசூழல். மாநிலம் முழுவதும் இருக்கும் எங்கள் தோழர்கள் 18 தொகுதிகளில் உற்சாகமாக களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பது என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றுவது போலாகாதா?
இது ஆரோக்கியமில்லாத விஷயம் தான். ஆனால் தேர்தலுக்கு பிறகு அரசு என்பது திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் நம்பர் கேம். இரண்டு கட்சிகளுக்குமே பாதுகாப்பு தேவைப்படுகிறது. மூன்றாவது அணி அமைந்தால் அதிலும் பங்கேற்க முயற்சிப்பார்கள்.
அப்படி அவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?
அது சூழலை பொருத்தது. அரசியலில் யூகத்தின் அடிப்படையில் பதில்சொல்ல முடியாது.
அப்படியானால் அதிமுக, பாஜகவோடு இணைந்து விடலாம் என்று நீங்கள் கூறுவதும் யூகம்தானே?
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அமல்படுத்த வேண்டுமானால் அது பாஜகவோடு இருந்தால் முடியாது. அதிமுகவை விமர்சிப்பது அவர்களைப் பேசவைப்பதற்காக.
மல்லிப்பட்டினம் சென்று வந்திருக்கிறீர்கள். அங்குள்ள நிலைமை எப்படி இருக்கிறது?
அங்குள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சண்டையிட வேண் டும் என்ற எண்ணம் இல்லை. பாஜக வேட்பாளர் அங்கு சென்று வந்ததால்தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாஜகவால் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் மீது 20 கிரிமினல் வழக்குகள் உள்ளன. wஆறு கொலை வழக்குகள், ஆயுதம் பதுக்கி வைத்த வழக்கு, கட்டப் பஞ்சாயத்து நடத்திய வழக்கு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT