Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 408 உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 288. கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 31 ஆயிரம் மாணவ, மாணவியர்களும், 12-ம் வகுப்பில் 20 ஆயிரம் மாணவ, மாணவியரும் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 25 சதவிகிதம் பேர் படிப்பில் பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தும் வகையில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அந்தோணி ஜோசப் ஆலோசனையின்பேரில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கிய நிலை யில் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பும் மேற்கொள்ளப் பட்டு, அதற்கான சிறப்பு வினா-விடை புத்தகங்களையும் அச்சிட்டு வழங்கப்பட்டன. அப்புத்தகங் களை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அந்தோணி ஜோசப், மாணவ, மாணவியருடைய படிப்பின் பின் தங்கிய நிலையைப் பற்றி கூறியதாவது, ’’தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் அதிக அளவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர். இந்த பின்நிலையைப் போக்க கடும்முயற்சி மேற் கொண்டு வருகிறோம். வரும் பொதுத் தேர்வில் 90 சதவிகித தேர்ச்சியை இலக்காக முன்வைத்து செயல்படுகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT