Published : 05 Apr 2017 09:59 AM
Last Updated : 05 Apr 2017 09:59 AM
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரொட்டி வியாபாரி ஒருவர் வியாபார நிமித்தமாக தினமும் பயணம் செல் லும்போது, சாலையோரங்களில் பயன் தரும் மர விதைகளைத் தூவிச் செல்கிறார்.
நான்குவழிச் சாலைகளுக்காக வும், நகர்ப்புற விரிவாக்கத்துக் காகவும் ஏற்கெனவே லட்சக்கணக் கான மரங்களை வெட்டிவிட்டதால், தற்போது மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கித் தமிழகம் தவித்து வருகிறது.
வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பார்கள். அதுபோல, மரங்களின் அரு மையை தற்போதுதான் நாம் உணரத் தொடங்கி உள்ளோம். தன்னார்வலர்கள், தனியார் சமூக அமைப்புகள் ஆங்காங்கே மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இருப்பினும், மரம் நடுதலை மாநி லம் முழுவதும் முழு இயக்கமாகச் செயல்படுத்தினால்தான், எதிர் காலத்தில் வறட்சியின் பிடியில் நிரந்தரமாக சிக்காமல் நாம் தப்ப முடியும்.
கடந்த 3 ஆண்டுகளாக...
சிவகங்கை மாவட்டம், கீழடி யைச் சேர்ந்தவர் ஜெ.சுரேஷ் குமார்(38). சிறு வியாபாரியான இவர், மதுரையில் உள்ள பெரிய நிறுவனங்களில் ரொட்டி, மிக்சர், கடலை மிட்டாய்களை வாங்கி திருப்புவனம் பகுதி கிராமங்களில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தினமும் பயணம் செய்கிறார். அப்படிச் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் புங்கன், வேம்பு, புளி, குண்டுமணி விதை களை வீசிச் செல்கிறார். இந்தப் பழக்கத்தை, கடந்த 3 ஆண்டுகளாக அவர் செய்து வருகிறார்.
இதுகுறித்து சுரேஷ்குமார் கூறிய தாவது: ‘‘முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மாசில் லாத வளமான இந்தியா உருவாக, ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது வழியில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். நானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். மதுரையில் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் ஏராளமான மரக் கன்றுகள் நட்டுள்ளேன்.
வியாபாரத்துக்குச் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை களில் விரிவாக்கப் பணிகளுக் காக ஏற்கெனவே இருந்த ஆயிரக் கணக்கான பசுமையான மரங்களை வெட்டி அழித்துவிட்டனர். தற்போது, அந்த சாலையில் செல்ல முடி யாத அளவுக்கு வெப்பமாக இருப் பதை உணர முடிகிறது. எனவே, மரக்கன்றுகள் நடுவதற்கு நாமும் ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தேன்.
அதற்காக, வேம்பு, புங்கன், வாகை மர விதைகளைச் சேகரித் தேன். தினமும் வியாபாரத்துக்குச் செல்லும்போது இருசக்கர வாகனத் தில் கைக்கு தகுந்தவாறு விதைப் பைகளைக் கொண்டுசெல்வேன். சாலையோரம் வெட்ட வெளியாக இருக்கும் இடங்களில் விதை களைத் தூவிச் செல்கிறேன். தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது, விதைகள் கட்டாயம் முளைத்து ஒருநாள் விருட்சமாகும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT