Last Updated : 01 Jul, 2016 08:21 AM

Published : 01 Jul 2016 08:21 AM
Last Updated : 01 Jul 2016 08:21 AM

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் அவசியம்: சுவாதியின் தந்தை வலியுறுத்தல்

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் அவசியம் இடம்பெற வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் சந்தான கோபால கிருஷ்ணன் கூறியதாவது:

சுவாதி அமைதியானவள். பள்ளி, கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாள். பின்னர், வளாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவாதிக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவளும் மகிழ்ச்சியாக வேலைக்குச் சென்று வந்தாள். அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான், யாரும் எதிர்பாராத அசம்பாவிதம் எனது மகளுக்கு நேர்ந்தது. தான் இறந்துவிட்டால் தனது உடல் யாருக்கேனும் பயன்பட வேண்டும் என்று சுவாதி நினைத்தாள். ஆனால், அதைக்கூட செய்ய முடியாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இப்போது ஒவ்வொரு நாளும் அவர்கள் வீடு திரும்பும் வரை பயத்துடன்தான் காத்திருக்கின்றனர். எல்கேஜி குழந்தை முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத வகையில் நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதற்காக, ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்புக்கென ஒரு காவலரை அரசால் நியமிக்க முடியாது. அசம்பாவிதங்களின்போது அருகில் இருப்பவர்களால்தான் உதவ முடியும்.

ஆனால், சுவாதி தாக்கப்பட்டு விழுந்த பிறகும், யாரும் எதுவும் பேசாமல், வெறுமனே பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். எனது மகள் தாக்கப்படும்போதுகூட யாரும் தடுத்திருக்க வேண்டாம். தாக்கப்பட்ட பிறகாவது யாராவது உதவியிருக்கலாம். அப்போதுகூட யாரும் உதவவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

நமது வாழ்க்கை முறை மாறிக்கொண்டே வந்தாலும், அறநெறிகளை நாம் விட்டுவிடக்கூடாது. வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல. அந்தக் காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருக்கும். தற்போது பள்ளிகளில் அதுபோன்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு அறநெறிகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

அசம்பாவிதங்கள் ஏற்படும்போது உதவுவது பற்றி மக்களிடையே தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசால் மட்டும் இந்த காரியத்தை செய்ய முடியாது. தன்னார்வ அமைப் பினர், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தச் செய லுக்கு உதவ வேண்டும். என் மகளுக்கு நேர்ந்த கொடுமை, இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. சுவாதிக்கு ஏற்பட்ட துயரமே, கடைசி சம்பவமாக இருக்க வேண் டும். எனவே, அதற்கேற்ற விழிப்புணர்வையும், நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x