Published : 02 Jun 2017 08:36 AM
Last Updated : 02 Jun 2017 08:36 AM
சென்னையில் விதிமீறல் கட்டிடங் களை வரையறை செய்வது தொடர்பாக 2 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அமைச்சர், அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்பதாலேயே அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவழக்கு பதிவுசெய்து, சிறை தண்டனை விதித்தால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.
சென்னை பெருநகரில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களில் அவ்வப் போது விபத்துகள் நடப்பதும், ஒருசில நாட்கள் அதுபற்றி பரபரப்பாக விவாதங்கள் நடப்பதும், மீண்டும் விவகாரம் அடங்கிப்போவதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது தி.நகரில் ஜவுளிக்கடை தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டிட விதிமீறல் பிரச்சினை மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியதாவது:
சென்னையில் பாரிமுனை, அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் ஏராள மான விதிமீறல் கட்டிடங்கள் உள்ள தாக 2006-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில், ‘1999 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உறுதியாக இருந்தால் இடிக்க வேண்டாம். அதன்பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.
சட்டவிரோதக் கட்டிடங்களை வரையறை செய்வது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் வர்கீஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.
90% கட்டிடங்களில் விதிமீறல்
சென்னையில் 90 சதவீத கட்டிடங் களில் விதிமீறல் இருப்பதாக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை நீதிமன்றத் திலேயே ஒப்புக்கொண்டுள்ளன. ‘அந்தக் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?’ என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘கட்டிட உரிமையாளர்களுக்கு நோட் டீஸ் கொடுக்கிறோம். பல கட்டிடங் களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் பொய் சொன்னார்கள். அதன் விளைவைத் தான் பல இடங்களில் அனுபவிக்கி றோம்.
யார் பொறுப்பு?
இந்த நிலைக்கு அமைச்சர்கள், அதிகாரிகளே முழு பொறுப்பு. அமைச்சர்களுக்குத் தெரியாமல் அதிகாரிகள் அரசாணை வெளியிட முடியாது. சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள், அத்துறை களுக்கான அமைச்சர்களைத்தான் விதிமீறல் கட்டிட விபத்துகளுக்குப் பொறுப்பாளியாக்க வேண்டும்.
ஜார்ஜ் டவுன் பகுதியில் 99 சதவீதம், அதாவது, 33 ஆயிரம் கட்டிடங்கள் விதிமீறிக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 1,000 உரிமையாளர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களிலும் அதை அகற்றிவிட்டனர்.
கீழ்தளம் மற்றும் 2 தளம் வரை மாநகராட்சியும், கீழ்தளம் மற்றும் 5 தளம் வரை சிஎம்டிஏவும் அனுமதி அளிக்கின்றன. 5 தளத்துக்கு மேல் என்றால், வீட்டுவசதி வாரிய செயலா ளர் சிறப்பு அனுமதி அளிப்பார். தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில் பல கட்டிடங்கள் 5 தளங்களுக்கு மேல்தான் கட்டப்படுகின்றன.
இக்கட்டிடங்களில் விதிமீறல் தொடர்பாக புகார் எழுந்தால், மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்குச் செல்வார்கள். ‘விதிமீறல் தொடர் பாக உரிமையாளர் அளித்த மனு நிலுவையில் இருப்பதால் சீல் வைக்க வேண்டாம்’ என்று வீட்டுவசதி அலுவலகத்தில் இருந்து வாய் மொழி உத்தரவு வரும். இதனால், மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுக் காமல் போய் விடு வார்கள். இப்படித் தான் தொடர்ந்து நடக்கிறது.
சென்னையில் விதிமீறிக் கட்டப் பட்ட கட்டி டங்களை வரை முறை செய்யக் கோரி 2 லட்சம் மனுக்கள் நிலுவை யில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்களை பைசல் செய்ய தனி செயலாளரை நியமித்து 3 மாதங் களுக்குள் இப்பணியை முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இவ்வாறு உத்தரவிட்டு 10 மாதங்கள் ஆகின்றன. தனி செயலாளர் நிய மிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. நிலுவை மனுக் கள் பைசல் செய்யப் பட்டதாகத் தெரிய வில்லை. விதிமீறல் கட்டிடங்களை வரைமுறை செய்தால் கீழ்நிலை முதல் மேல்நிலை அதிகாரிகள் வரை அனைவரும் சிக்குவார்கள். மாதந்தோறும் லஞ்சம் கிடைக்காது என்பதாலேயே, நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
விதிமீறல் கட்டிடங்களை இடித் தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. ‘‘அப்படி யானால் என்னதான் செய்யப் போகிறீர்கள்?’’ என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஆலோசனை நடத்தி விட்டுச் சொல்வதாக கூறினர். இதுவரை எதுவும் சொல்லவில்லை.
அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, கட்டிட விதிமீறல் விவகாரத்தில் அலட்சியத்துடன் நடந்துகொள்கின்றனர். பொதுமக் களின் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்கத் தவறிய குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 110, 166ஏ, 217-ன் கீழ், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்து, பாரபட்சமின்றி ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT