Published : 01 May 2014 01:42 PM
Last Updated : 01 May 2014 01:42 PM

வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை விவரம் நாளை வெளியீடு: இணையதள விண்ணப்பம் மே 12 தொடக்கம்

கோவை வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கான அறிவிப்பு விவரம் நாளை வெளியிடப்படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையத்தில் வரும் 12-ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து கோவை, தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகள் மூலமாக வரும் கல்வி ஆண்டின் 13 பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த விவரம் வரும் மே 2-ல் அறிவிக்கப்படவுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையத்தில் மே 12 முதல் வெளியிடப்படும். பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: ஜூன் 7. இதற்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 16-ல் வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு www.tnau.ac.in/admission.html என்ற இணையத்தில் அறியலாம். 0422 -6611345/6611346 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x