Last Updated : 28 Mar, 2014 11:40 AM

 

Published : 28 Mar 2014 11:40 AM
Last Updated : 28 Mar 2014 11:40 AM

சென்னையில் சீரான பஸ் சேவை: மாநகர போக்குவரத்துக் கழகம் புது திட்டம்- வழித்தடத்தில் சோதனை பணி தொடக்கம்

சென்னையில் மக்களுக்கு சீரான பஸ் சேவை கிடைக்கவும், வரு வாய் பெருகவும் மாநகர போக்கு வரத்துக் கழகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக பஸ் வழித்தடத்தில் சோதனைப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையின் எல்லை விரி வடைந்துவரும் நிலையில், பஸ் சேவையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், மாநகர போக்குவரத்துக் கழகத் தின் மூலம் இயக்கப்படும் பஸ்கள் சீராக இயக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முக்கியமான வழித்தடங்களில் 45 நிமிடங்கள் வரை பஸ்களே வருவதில்லை, பிறகு வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 பஸ்கள் அணிவகுத்து வருகின்றன. இதனால், போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மக்களுக்கும் சீரான பஸ் சேவை கிடைப்பதில்லை.

இந்த நிலையைப் போக்க மாநகர போக்குவரத்துக் கழகம் புது திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, பஸ் வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தையும் தொடங்கியுள்ளது. இதற்காக காலை, மாலையில் தலா 50 பயிற்சி நடத்துநர்களை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களை கண்காணிக்க முதல்கட்டமாக 8 டிக்கெட் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் வெகு நேரத்துக்கு பஸ்கள் வராமல் இருந்து, பின்னர் ஒரே நேரத்தில் அதிக பஸ்கள் வருகின்றன என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தற்போது, முதல்கட்டமாக 21எச் (பிராட்வே கேளம்பாக்கம்) பஸ் வழித்தடத்தில் பஸ் நிறுத்தங்களில் ஆய்வு நடத்த காலை, மாலையில் தலா 50 பயிற்சி நடத்துநர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். பஸ் வரும் நேரம், பயணிகளின் எண்ணிக்கை, பஸ் சென்றடையும் நேரம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து ஒழுங்குபடுத்த உத்தர விட்டுள்ளோம். இவர்களைக் கண் காணிக்க 8 டிக்கெட் பரிசோத கர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையை தீவிரப்படுத்தி பஸ்களை ஒழுங்குபடுத்தி இயக்கவுள்ளோம். இதனால், போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயும் அதிகரிக்கும், மக்களுக்கும் சீரான பஸ் சேவையும் கிடைக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x