Published : 17 Apr 2017 09:32 AM
Last Updated : 17 Apr 2017 09:32 AM
செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மனிதர்களைப்போல் சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்திருப்பது கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீடுகளில் பாதுகாப்புக்காகவும், செல்லப் பிராணிகளாகவும் நாய் களை வளர்ப்பது அதிகரித்துள்ளது. நாய்களை ரேபீஸ், படர்தாமரை நோய் உள்ளிட்டவை மட்டுமே இதுவரை அச்சுறுத்தி வந்தன. வளர்ப்பு நாய்களில் பராமரிப்பு அதிகமாக இருப்பதால் ரேபீஸ் பெரிய அளவில் வராது. ஆனால், தற்போது மனிதர்களைப்போல் வளர்ப்பு நாய்களை சர்க்கரை நோய் அதிகமாக தாக்கி வருகிறது. சென்னை, பெங்களூருவில் தினமும் 2 முதல் 5 நாய்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், திருச்சி, வேலூர், திருநெல்வேலி போன்ற நகரங்களில் வளர்ப்பு நாய்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது மருத்துவப் பரிசோத னையில் வெளிப்படத் தொடங்கி யுள்ளது. பலர் நாய்களை சிகிச் சைக்கு அழைத்து வராததால் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு புள்ளிவிவரங்கள் முறையாக இல்லை.
இதுகுறித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு கால்நடை மருத்துவர் சி.மெரில்ராஜ் கூறிய தாவது:
வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கவழக்கத்தால் தற்போது சர்க்கரை தாக்கம் அதிக அளவில் ஏற்பட ஆரம்பித்துள்ளது. பொது வாக வெளிநாட்டு நாய்கள் 10 முதல் 12 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை. நமது நாட்டு நாய்கள் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.
வெளிநாட்டு நாய்களில் டாபர் மேன், அல்சேஷன், பேசண்ட், டிகில், பூடூல் உள்ளிட்ட நாய்களுக்கு ஆண், பெண் பாரபட்சமில்லாமல் சர்க்கரை நோய் வருகிறது. உடல் பருமன் அதிகம் உள்ள மற்ற நாய்களுக்கும் இந்த சர்க்கரை நோய் அதிகமாக வருகிறது. நகரப் பகுதிகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு சராசரியாக 6 முதல் 9 வயதுக்குள் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய், நாய்களுக்கு பெற்றோரிடம் இருந்து வரும் பரம்பரை வியாதியாகவும், பாஸ்ட் புட், நொறுக்கு தீனி, கிரீம் பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்ட வற்றை அதிக அளவில் தின்பதாலும் வருகிறது. சில நேரங்களில் ஒரு வயது, அதற்கு கீழ் உள்ள நாய் களுக்கும் தற்போது சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. கணையம் போதுமான வளர்ச்சி யடையாததால் இன்சுலின் குறை வாக சுரந்து சர்க்கரை நோய் நாய் களுக்கு வருகிறது. இதை கவனிக் காமல் விட்டால் இறுதிக்கட்டத்தில் கண் பார்வை இழந்து உயிரிழப் பையும் ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயுள்ள மனிதர் களுக்கு காணப்படக்கூடிய பொது வான அறிகுறிகளே நாய்களுக்கும் பொருந்தும். அதிக தாகம், அதிக அளவு சிறுநீர் வெளியேற்றம், உடல் எடை குறைய ஆரம்பிப்பது, அதிக பசி உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக சர்க்கரை நோய் வந்த நாய்களில் காணப்படுகிறது.
பொதுவாக நாய்களுக்கு சராசரியாக ரத்தத்தில் குளுகோஸ் அளவு 80 முதல் 120 மில்லி கிராம் இருக்கும். இந்த அளவு 250 முதல் 300 மில்லி கிராம் உயரும்போது சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டதாகக் கருதலாம்.
நாய்களின் காதில் உள்ள நரம்புகளில் இருக்கும் ரத்தத்தை சேகரித்து பரிசோதனை செய்து சர்க்கரை நோயை தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோயை குணப்படுத்த நாய்களுக்கு காலை, மாலை நேரங்களில் இன்சுலின் ஊசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பராமரிக்கும் முறை
சர்க்கரை நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெறுவது ஒரு முறை. சர்க்கரை நோய் ஏற்படுத்தும் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது, நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, நாய்களுக்கு வழங்கும் இரையில் 30 முதல் 40 சதவீதம் புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்வது, கொழுப்பு, கார்போஹைட்ரேட்டை 30 சதவீதத்துக்கு கீழ் வைத்துக்கொள்வது, 6 மாதங்களுக்கு ஒருமுறை வளர்ப்பு நாய்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT