Published : 15 Apr 2017 10:11 AM
Last Updated : 15 Apr 2017 10:11 AM
மழை இல்லாததால் பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் தென்னை மரங்கள் பட்டுப்போயுள்ளன. தட்டுப்பாடு காரணமாக இளநீர் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பகுதியில் மட்டும் 75 சதவீத தென்னை மரங்கள் உள்ளன. அதிக நீரும், சுவையும் கொண்டதால் பொள்ளாச்சி இளநீர் மிகவும் பிரபலம். இங்கு விளையும் தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயின் அளவு 18 முதல் 20 சத வீதம் வரை இருக்கும். அதனால் பொள்ளாச்சி இளநீர், தேங்காய்க்கு எப்பவுமே தனி மவுசுதான். நாட்டு தென்னையாக இருந்தால் ஆண் டுக்கு 75 முதல் 100 காய்கள் வரை காய்க்கும். ஒட்டுரக தென்னையாக இருந்தால் ஆண்டுக்கு 100 முதல் 200 காய்கள் வரை காய்க்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு எல்லாம் தலைகீழாகிவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் பட்டுப்போகும் தென்னை மரங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு 6 மாதம் ஆகிவிட்டது. அணையில் தற்போது இருக்கும் தண்ணீர் கேரளா மற்றும் கோவை, திருப்பூர், வெள்ளகோவில், கரூர் மக்களின் குடிநீருக்கே போதுமான தாக இல்லை. நிலத்தடி நீர் மட்ட மும் அதலபாதாளத்துக்குப் போய் விட்டதால் கிணறுகள் வற்றிவிட்டன. 100 அடி வரை போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், இப்போது ஆயிரத்து 300 அடி வரை போட்டும் தண்ணீர் இல்லை. பட்டுப்போகும் மரங்களைக் காப்பாற்ற ஒரு லாரித் தண்ணீரை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி ஊற்றுகிறார்கள்.
ஒரு தென்னைக்கு தினமும் 100 முதல் 120 லிட்டர் தண்ணீர் தேவை. இரண்டு ஆண்டுகளாக 60 லிட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்க வில்லை. மரத்துக்கு அடியில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினாலும், மழை பெய்து குருத்தில் தண் ணீர் இறங்கினால்தான் காய் பிடிக் கும். இல்லாவிட்டால் காய் சிறிய தாகிவிடும். இப்போது சுட்டெரிக் கும் வெயிலில் காய்கள் கொட்டிப் போய்விடுகின்றன என்று தென்னை விவசாயிகள் வேதனை தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சரிவர மழை பெய்யாததால் பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் பட்டுப் போய் விட்டன. ஒரு ஏக்கர் தென்னையில் ரூ.30 ஆயிரம் வரை வருவாய் கிடைத்தது. இப்போது ரூ.5 ஆயிரம் தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஒரு இளநீரை ரூ.25 வரை விற் றோம். இந்த ஆண்டு அந்த விலை கொடுத்தாலும் விற்பதற்கு இளநீர் இல்லை. ஒரு மரத்தில் 200 இளநீர் கிடைத்துவந்தது. இப்போது 20 முதல் 25 இளநீர்தான் கிடைக்கிறது. அதிலும் தண்ணீர் குறைவாகவே உள்ளது.
தென்னை நார் கழிவுகளை செங்கல் போல தயாரித்து ஏற்றுமதி செய்து வந்த ஆயிரம் தொழிற் சாலைகள் பல கோடி ரூபாய் வணி கத்தை இழந்துள்ளன. தென்னை விவசாயிகள் மட்டுமின்றி அதைச் சார்ந்த தொழில்கள், கூலித் தொழி லாளர்கள் என பல்லாயிரக் கணக்கான பேர் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
கேரளாவில் பட்டுப்போன ஒரு தென்னைக்கு ரூ1,500 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமி ழகத்தில் பட்டுப்போன தென் னைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும்படி மத்திய தென்னை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.
இவ்வாறு கிருஷ்ணசாமி கவுண்டர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT