Published : 02 Jan 2014 10:02 AM
Last Updated : 02 Jan 2014 10:02 AM
சென்னையில் வரும் இன்று (வியாழக்கிழமை) பா.ம.க. தலைமை பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறி வித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாமக தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கருத்து நிலவி வருகிறது. இதனால், சமூக ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமைப்புகள் மற்றும் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT