Published : 03 Feb 2017 09:44 AM
Last Updated : 03 Feb 2017 09:44 AM

நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்!- மாற்று வழிகளை யோசிப்பதால் தன்னார்வலர்கள் எதிர்ப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக் கும் அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், தமிழக நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுமார் 1,600 கடைகளை அகற் றினால் சுமார் ரூ.7000 கோடி இழப்பு ஏற் படும் என்பதால் அதிகாரிகள் தயக்கம் காட்டி, மாற்று திட்டங்களை தீட்டி வரு கிறார்கள். இதற்கு தமிழகம் முழுவது முள்ள பல்வேறு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், மதுவிலக்கு கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2016 ஜூன் மாதம் முதல்கட்டமாக 500 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால், மதுக்கடைகளின் எண்ணிக்கை 6,200-ஆக குறைந்தது. அடுத்தகட்டமாக சுமார் 1000 கடைகளை தமிழக அரசு விரைவில் மூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் குறைந் தது 500 மீட்டர் தொலைவு வரை கடை வைக்கக் கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகாரிகள் கணக் கெடுப்பில் 3,850 கடைகள் நெடுஞ்சாலை களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 1,600 கடைகள் நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருக்கும் ‘ஏ’ மற்றும் ‘பி’ விற்பனை ரகக் கடைகள். அதாவது, மேற்கண்ட கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும். மீத மிருக்கும் 2,250 கடைகள் கிராமப்புறங் களில் இருக்கும் ‘சி’ விற்பனை ரகக் கடைகள்.

நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருக் கும் கடைகளை இடம் மாற்றுவது தொடர் பாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவற்றை 500 மீட்டர் தொலைவுக்கு தள்ளி இடம் மாற்ற முடியாது என்பது தெரியவந்துள்ளது. 500 மீட்டர் தொலை வில் தள்ளி இடம் மாற்றும்போது அங்கே கல்வி நிறுவனம், வழிபாட்டு தலம் அல்லது நெருக்கமான குடியிருப்புகள் என இவற்றில் ஏதோ ஒன்று இருக் கிறது. இதனால், அந்தக் கடைகளை அப் புறப்படுத்துவது தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தின் நான்கில் ஒரு பங்கு மதுக்கடைகளை அதிலும் மதுபானங்கள் அதிகம் விற்பனையாகும் கடைகளை அப்புறப்படுத்த அரசுத் தரப்பு விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ‘தி இந்து’ விடம் பேசிய அதிகாரிகள், “நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுமார் 1,600 கடைகள் மூலம் சுமார் 7,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக்கின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இது. .இதனை இழக்க அரசு விரும்பவில்லை.

தற்போது தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி நகர்ப்புற கல்வி நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் அருகே 50 மீட்டருக்குள்ளேயும், நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 100 மீட்டருக்குள்ளேயும் மதுபானக் கடைகளை வைக்கக் கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது. இதன் அடிப் படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பான 500 மீட் டர் என்பதை 100 மீட்டருக்குள் குறைக் கும்படி மேல்முறையீடு செய்யவும் அதிகாரிகள் சிலர் யோசனை தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.

ஆனால், இதற்கு தமிழகம் முழு வதும் இருக்கும் மதுவிலக்கு கோரும் தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். உள்ளாட்சிகளுக்காக செயல் பட்டு வரும் நந்தகுமார் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மதுவிலக்கை நோக்கிய நகர்வாகத்தான் கருதப்படு கிறது. இதை முன்வைத்து ஒரு மாநில அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதிலும் மது விலக்கு வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களும் உயிர்த்தியாகங் களும் நடந்த தமிழகத்தில் இது கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

500 கடைகளை மூடிய பின்பு மேலும் 1000 கடைகள் மூடப்படுவதாக தகவல்கள் வந்தன. 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து இதனை செயல் படுத்துவதே ஓர் அரசின் நேர்மையான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால், தீர்ப்பை செயல்படுத்த வேண் டிய அதிகாரிகள் கடைகளை இயக்க மாற்று திட்டங்களை தீட்டிவருகிறார்கள். இதனால், சட்ட ரீதியான போராட்டங் களை மேற்கொள்ள தயாராகி விட்டோம்.

தற்போதுவரை திருவாரூர் மாவட் டம் மணக்கால் கிராமப் பஞ்சாயத்து, ராஜபாளையம் ஒன்றியம் வடக்கு தேவதானம் பஞ்சாயத்து, கன்னியா குமரி மேல்புறம் ஒன்றியம் முழுக் கோடு பஞ்சாயத்து, வன்னியூர் பஞ் சாயத்து, தக்கலை ஒன்றியம் திக்கனங் கோடு பஞ்சாயத்து, நாகை குத்தாலம் ஒன்றியம் திருவாலங்காடு பஞ் சாயத்து, கடலூர் நல்லூர் ஒன்றியம் வெண்கரும்பூர் பஞ்சாயத்து, தூத்துக் குடி விளாத்திகுளம் ஒன்றியம் வேம் பாறு பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துக்களில் மதுவிலக்குக்காக கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கிராம சபை தீர்மானங்களை பெற்றுள்ளோம்.

இவற்றை கொண்டு மாவட்ட ஆட்சி யர்களிடம் முறையிடுவது, அடுத்த கட்டமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது ஆகிய சட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள இருக்கிறோம். ஏற்கெனவே கலிங்கப்பட்டியில் இந்த வழியில்தான் மதுக்கடை மூடப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x