Published : 30 Apr 2017 09:10 AM
Last Updated : 30 Apr 2017 09:10 AM

முறையான தண்டனைகள் இல்லாததால் அதிகளவில் ஊக்குவிக்கப்படும் குழந்தை தொழிலாளர் முறை: இன்று குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாள்

தேசிய அளவில் குழந்தை உழைப்பு ஒழிப்பு மற்றும் முறைப்படுத் துதல் சட்டம் 1986-ன் கீழ் அடை யாளம் காணப்பட்ட மீறல்களில் முறையான தண்டனைகள் வழங் கப்படவில்லை என ‘குழந்தை உழைப்புக்கு எதிரான பிரச்சாரம்’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

உலக உழைப்பாளர் தினத் துக்கு முந்தைய நாளான ஏப்ரல் 30-ம் தேதி உலக குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. மத்திய - மாநில அரசுகள் ‘இளைஞர்களின் கையில் வளமான இந்தியா’ என்று பிரச்சாரம் செய்துகொண்டே குழந்தைத் தொழிலாளர் முறையை யும் மறைமுகமாக ஊக்குவிக் கின்றன. குழந்தை உழைப்பை முறைப்படுத்துதல் மற்றும் ஒழித் தல் தொடர்பாக 1986-ல் கொண்டு வரப்பட்ட சட்டமானது ‘14 வய துக்கு மேற்பட்ட குழந்தைகளை பாதுகாப்பான பணிகளில் ஈடுபடுத் தலாம்’ என்கிறது. இந்தச் சட்டத்தில் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தமானது, ‘14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்’ என்கிறது.

“இந்தச் சட்டங்கள் அனைத் துமே குழந்தைகளை குறுக்கு வழியில் கொத்தடிமைத் தொழி லாளர்கள் ஆக்குவதை மேலும் ஊக்குவிக்கும்’’ என்கிறார் ‘குழந்தை உழைப்புக்கு எதிரான பிராசாரம்’ அமைப்பின் தமிழ்நாடு - புதுச்சேரி அமைப்பாளர் பா.ராஜ கோபால். அவர் மேலும் கூறும் போது, “18 வயதுக்கு உட்பட்ட அனைவருமே குழந்தைகள் என்ற ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் (யு.என்.சி.ஆர்.சி) இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. 2013-ல் மத்திய அரசு கொண்டுவந்த, குழந்தைகளுக்கான தேசிய கொள்கைச் சட்டமும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகளே என்கிறது. அப்படி இருக்கும்போது, 14 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுமதிக் கலாம் என்பது குழந்தைகள் உரிமையைப் பறித்து அவர்களின் எதிர்காலத்தை முடமாக்கும் செயல்.

புதிய சட்டத் திருத்தம் வந்த பிறகு, குழந்தைகளை வீட்டில் வைத்து வேலை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டாசு, தீப்பெட்டி, பீடி, பஞ்சு ஆலைகளிலும், செங்கல் சூளை களிலும், பணிமனைகளிலும், கொலுசு பட்டறைகளிலும் குழந் தைத் தொழிலாளர்கள் இன்னமும் பணி செய்கிறார்கள். ஒருபக்கம் குழந்தைகள் உரிமை பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் வணிக நிறுவனங்களுக்கு குழந் தைத் தொழிலாளர்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். இப்படியே போனால் எதிர்காலத்தில் இந்தியா ஏழைகளின் தொழில்கூடமாக மாறிவிடும்.

தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக் கிறார்கள். ஆனால், இதுபற்றி ஆர்.டி.ஐ-யில் கேட்டால், குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் இல்லை; மீட்கப்படவும் இல்லை. அவர்களை நாங்களே இனம் கண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட பள்ளிகளில் சேர்த்துவிட்டோம்’ என பதில் தருகிறார்கள். 12 மாவட்டங் களில் குழந்தைத் தொழிலாளர் திட்ட பள்ளிகள் இயங்கினாலும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் அவற்றின் செயல்பாடு பெயரளவிலேயே இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் சிறார் நீதி சட்டக்குழு, குழந்தை நலக்குழு, ‘சைல்டு லைன்’ என குழந்தைத் தொழிலாளர்களைக் கண்காணிக்க 7 அமைப்புகள் உள்ளன. 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்புகளின் கூட்டுக் குழுவானது வட்டார அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். ஆய் வில், குழந்தைத் தொழிலாளர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யாமல் எச்சரித்து விட்டுவிடுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவில் 15 சதவீதத்துக்கும் குறை வான மீறல்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த அவலங்கள் எல்லாம் ஒழிக் கப்பட வேண்டுமானால், ‘18 வய துக்கு உட்பட்டவர்கள் குழந்தை களே, அவர்களை எந்தத் தொழிலிலும் அமர்த்தக் கூடாது. மீறி அமர்த்துபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக இருக்கும்’’ என்றார்.

குழந்தைத் தொழில் முறையை ஒழிக்க அரசு செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டங்களை முன்மொழிவதற்காக இன்று சென் னையில் மாநில அளவிலான கருத் தரங்கை நடத்துகிறது ‘குழந்தை உழைப்புக்கு எதிரான பிரச்சாரம்’ அமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x