Published : 27 Jun 2016 08:10 AM
Last Updated : 27 Jun 2016 08:10 AM

தினமும் 45 ஆயிரம் யூனிட் பெற முடியும்: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 9 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரை களில் மொத்தம் 9 மெகா வாட் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் தினமும் 45 ஆயிரம் யூனிட் மின் சாரம் உற்பத்தி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட் டுள்ளது. இதற்கான தனியார் நிறு வனங்கள் டெண்டர் மூலம் விரை வில் தேர்வு செய்யப்படவுள்ளன.

சென்னையில் இரு வழித்தடங் களில் மொத்தம் 45 கி.மீ. தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையிலும், ஆலந்தூ ரில் இருந்து பரங்கிமலை வரையி லும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த சேவை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படவுள்ளது.

தற்போது ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சிஎம்பிடி வழியாக கோயம்பேடுக்கு உயர் மட்ட பாதை வழியாக தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக உயர்மட்ட பாதையில் அமைக்கப் படும் மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் மேற்கூரைகளில் சுமார் 9 மெகா வாட் அளவுக்கு சோலார் கருவிகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில்வே வாரியம் விரைவு ரயில் கள் மற்றும் ரயில் நிலையங்களில் சோலார் கருவிகளை அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. புதியதாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. சென்னையில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வருடத்தில் 300 நாட் களுக்கு இங்கு சோலார் மின் உற் பத்தி செய்ய முடியும்.

சென்னையில் உயர்மட்ட பாதை யில் விமான நிலையம், நங்க நல்லூர் சாலை, சின்னமலை, ஆலந் தூர், அரும்பாக்கம், வடபழனி, கோயம்பேடு பஸ் நிலையம் உட் பட மொத்தம் 29 இடங்களில் 79 ஆயி ரத்து 759 சதுர மீட்டர் பரப்பளவை தேர்வு செய்து, அங்கு சுமார் 8 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். மின் உற்பத்திக்கான தனியார் நிறுவனங்கள் டெண்டர் மூலம் தேர்வு செய்து 2 ஆண்டுகளில் ஒட்டு மொத்த பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

பயன்பாட்டிற்கு வரும்போது தினமும் 45 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கெனவே, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு மெகா வாட் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்பட்டு விரைவில் மின் உற்பத்தி தொடங்கவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இங்குதான் அதிகம்

கட்டிடங்களின் மாடிகளில் சோலார் கருவிகளை பொருத்தி மின் உற்பத்தி செய்வதில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக் கிறது. தற்போது, மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் சோலார் கருவிகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில் நிறுவனத்தில்தான் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 9 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

என்ன பயன்?

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொத்த செலவில் சுமார் 50 சதவீத செலவுகள் மின்சாரத்துக்குதான் செலவிடப்படுகிறது. தற்போது ஒரு யூனிட் ரூ.8 வரை செலவாகிறது. ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின் உற்பத்தி செய்யப்பட்டால் ஒரு யூனிட் ரூ.5.10-க்கு பெற முடியும். இதனால் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு செலவும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x