Published : 06 Jan 2017 04:07 PM
Last Updated : 06 Jan 2017 04:07 PM
உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த கணக்கெடுப்பு தீவிரமாக நடக்கிறது. இதுவரை 3,850 கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 6,000 டாஸ்மாக் உள்ளன. இந்த கடைகளில் 7 ஆயிரம் மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரம் விற்பனையாளர்கள், 4 ஆயிரம் உதவி விற்பனையாளர்கள் உட்பட 28 ஆயிரம் பேர் பணிபு ரிகின்றனர். மதுவிலக்கை அமல்படு த்துமாறு எதிர்க்கட்சியினர், சமூக அமைப்புகள், பொது மக்கள் சார்பில் தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிக வருமானம் கிடைக்கும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு தயங்கி வரு கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லின்போது, எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஆட்சிப் பொறுப் பேற்ற பின், குடியிருப்பு பகுதி கள், கோயில், பள்ளிகள் அருகே இருந்த 500 கடைகள் மூடப் பட்டன. இதையடுத்து டாஸ்மாக் கடை களின் எண்ணிக்கை 6,500-லிருந்து 6,000-மாக குறைந்தது. தற்போது மூடப்பட்ட அந்த கடைகள், வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரமுள்ள மதுபானக் கடைகளை வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப் பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, வரும் ஏப்ரல் இறுதிக்குள் மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை கடைகளை மூடிவிட்டு, அந்த கடைகளை, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்காக தற்போது டாஸ்மாக் துறை அதிகாரிகள் குழு, தமிழகம் முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடை களை கணக்கெடுத்து வரு கின்றனர். இதுபோன்று, 3,800 கடைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ் மாக் கடைகள் மிக குறை வாகவே இருக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளில்தான் அதிக எண்ணிக்கையிலான கடைகள் இருக்கின்றன. பெரும் பாலும், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் நெடுஞ்சாலைகளில் அதிக அளவு கடைகள் உள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடியபோது, அந்த கடைகளில் பணிபுரிந்த 3,400 ஊழியர்கள் வேலையிழந்தனர். அவர்களை அதிகாரிகள், டாஸ்மாக் குடோன், மற்ற கடைகள் மற்றும் பறக்கும் படை குழுவில் பணியமர்த்தினர். மேலும், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதுவிற்பனை நடக்கும் கடைகளில் கூடுதலாக ஒரு மேற்பார்வையாளரையும், 1 லட்சம் ரூபாய் விற்பனை நடக்கும் கடைகளில் கூடுதலாக ஒரு விற்பனையாளரையும் நியமித்தனர். இதுபோக இன்னும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலையில்லாமல் ஊதியம் பெற்று வருகின்றனர்.
தற்போது, மாநில நெடுஞ் சாலை, தேசிய நெடுங்சாலைகளில் இருக்கும் 3,850 கடைகள் வரை மூடப்படுவதற்கு வாய் ப்புள்ளது. இந்த கடைகளில் பெரும்பாலானவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், இந்த கடைகள் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், சுடுகாடு, கண்மாய், ஏரிப்பகுதிகளிலும் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால், புதிய கடைகளை திறக்க முடியாமல் மேலும் பல ஊழியர்கள் வேலையிழக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT