Published : 03 Jan 2014 09:14 AM
Last Updated : 03 Jan 2014 09:14 AM
தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் ஓடக்காடு பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியது:
காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை.குஜராத்தை தவிர பெரு வாரியான மாநிலங்களில் மது விற்பனை நடைபெறுகிறது.
மது விற்பனையை பிரதான ஆதாரமாகக் கொண்டிருப்பது தமிழகம்தான். கடந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கு 180 கோடி விற் பனையானது. தற்போது, 270 கோடியாக உள்ளது.
தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும்? அரசு தரும் இலவசம் எல்லாம், மக்களின் வரிப்பணம். அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்துக்காக மதுக்கடைகளா?
கர்நாடக பா.ஜ.க. தலைமையும், கர்நாடகத்தில் இருப்பவர்களும் எடியூரப்பா பா.ஜ.கவில் இணை வதை வரவேற்கிறார்கள். நாங்கள் சிதறியதால் கர்நாடகாவில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
வைகோவுக்கு வரவேற்பு
நரேந்திர மோடியை பிரதமராக ஏற்போரைக் கொண்டு பா.ஜ.க. கூட்டணி அமைத்து வருகிறது. தமிழகத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அல்லாத மோடியை ஆதரிக்கும் கட்சிகளை, கூட்டணியில் சேர்ப் போம். வைகோவின் அறிக் கையை வரவேற்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் பா.ஜ.கவும் ஓர் அங்கம்தான். ஆகவே, கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாம் அங்கம் வகிக் கத்தான் முடியும். யார் தலைமையில் என்கிற கேள்விக்கு இடமில்லை. தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில்தான் நிற்கின்றன.
பாஜக கனவு 300
பா.ஜ.கவின் அடையாளமாக மோடி திகழ்கிறார். 300 தொகுதி களில் வெற்றிபெறுவது பா.ஜ.க வின் கனவு.
இலங்கை தமிழர்கள், சமாதான மான, அமைதியான வாழ்க்கையை தங்களது சொந்த நிலத்தில் நடத்த வேண்டும். ராணுவ முகாம்கள் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.
மோடி ஆட்சியமைத்தால் தென்னக நதிகள் இணைப்புக்கு அடிக்கல் நாட்டப்படும். ஆம் ஆத்மி யால் நாட்டில் தொப்பி விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT