Published : 28 Feb 2014 09:50 AM
Last Updated : 28 Feb 2014 09:50 AM

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஊர்வலம்: சேவ் தமிழ் அமைப்பு இன்று நடத்துகிறது

வேலைக்கு செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 'இரவை மீட்டெடுப்போம்' என்ற கோஷத்துடன் சேவ் தமிழ் அமைப்பினர் இன்று சிப்காட் வளாகத்தில் மாலை மெழுகுவத்தி ஏந்தி அமைதி ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.

சிப்காட் ஐ.டி. வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரியின் மரணம் இரவு நேரத்தில் பணி செய்யும் பல பெண் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஐ.டி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சமந்தா என்பவர் கூறுகையில்:- '' உமா மகேஸ்வரி மரணத்திற்குப் பிறகு பெற்றோர்கள் மிகவும் பயந்து உள்ளனர். சம்பவம் நடந்ததில் இருந்து வேலைக்குச் செல்லும் போது பாதுகாப்பாக இருக்கச் சொல் கின்றனர். பெற்றோர்கள் மற்றும் சக பெண் ஐ.டி ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

இது குறித்து சேவ் தமிழ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பரிமளா கூறுகையில்:- ஐ. டி. தனியார் நிறுவனங்கள் நிறைந்து இருக்கும் பள்ளிக்கரணை, சிப்காட், டைடல் பார்க் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வேலை செய்யும் பெண்ஊழியர்கள் உமா மகேஸ் வரியின் மரணத்திற்கு பிறகு மிகவும் பயந்து உள்ளனர்.

அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற் படுத்த வலியுறுத்தியும், மறைந்த உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத் தும் வகையிலும் 'இரவை மீட்டெடுப் போம்' என்ற விழிப்புணர்வு அமைதி ஊர்வலம் சிப்காட் டி. சி. எஸ். வளாகத்தில் இருந்து நுழைவாயில் வரை ஊர்வலம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x