Published : 22 Sep 2016 06:39 PM
Last Updated : 22 Sep 2016 06:39 PM
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்ததை அடுத்து, கர்நாடக அரசு தண்ணீர் தராததைக் கண்டித்தும், மத்திய அரசு காவிரியைத் திறந்துவிடக்கோரி கர்நாடகத்தை நிர்பந்திக்காததைக் கண்டித்தும் திருச்சி காவேரிப்பாலம் அருகில், சிந்தாமணி படித்துறை சாக்கடை நீரில் இறங்கி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீஸார் யாரும் உள்ளே இறங்காததால் போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
காவிரியில் தேங்கியுள்ள சாக்கடையில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT