Last Updated : 07 May, 2017 08:36 AM

 

Published : 07 May 2017 08:36 AM
Last Updated : 07 May 2017 08:36 AM

அக்னி வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி: சென்னை காவல்துறை நடவடிக்கை

அக்னி வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து போலீஸார் எளிதில் சோர்வ டைந்து விடுகின்றனர். இந்த சோர்வை தணிப்பதற்காக வெயிலை சமாளிக்கும் வகையில் சென்னையில் உள்ள 2,500 போக்குவரத்து போலீஸாருக்கு 2 மோர் பாக்கெட் வீதம், தினமும் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெயில் காலம் முடியும்வரை போக்குவரத்து போலீஸார் அனைவரும் தெர்மா கோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொள்ள போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த வகை தொப்பிகள் அனைத்து போக்குவரத்து போலீ ஸாருக்கும் ஏற்கெனவே வழங் கப்பட்டுள்ளன. அது இல்லாத வர்கள் தங்கள் உயர் அதிகாரி களிடம் இலவசமாக பெற்றுக் கொள்ளவும் அவர் உத்தரவிட் டுள்ளார்.

இதுகுறித்து, கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் கூறும்போது, “வெயிலின் தாக்கத் தால் போக்குவரத்து போலீஸார் அதிக சிரமத்துக்குள்ளாகி வருகின் றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தெர்மாகோல் தொப்பி அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தொப்பி சேதம் அடைந்திருந் தாலோ, தவற விட்டிருந்தாலோ தயக்கம் இல்லாமல் உயர் அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். அவற்றை இலவச மாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

போக்குவரத்து போலீஸாருக்கு ஆண்டுதோறும் இலவச சீருடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சீருடை வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x