Published : 29 Jun 2016 09:22 AM
Last Updated : 29 Jun 2016 09:22 AM

7 மாதங்களாக நடைபெறும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி: பொதுமக்கள் கடும் அவதி

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை யில் கடந்த 7 மாதங்களாக நடை பெறும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியால், அந்த சாலை சரக்கு வாகன நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. முடிக்கப்படாத பணிகளால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் 1926-ம் ஆண்டு ஆங்கி லேயர்களால் கட்டப்பட்ட கழிவுநீர் இறைக்கும் நிலையம் உள்ளது. சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத் தின்போது, இந்த சாலையில் பதிக் கப்பட்டிருந்த கழிவுநீர் குழாய்கள் மற்றும், அடைப்பு நீக்க பயன் படுத்தும் குழிகள் இடிந்து விழுந் தன. அதனால் அந்த சாலை யில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மயிலாப்பூர் வழியாக ராயப் பேட்டை, அண்ணா சாலை, சென்ட் ரல், பிராட்வே செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் விவே கானந்தா கல்லூரி, ராதாகிருஷ்ணன் சாலை உட்லன்ஸ் ஹோட்டல் வழி யாக, மியூசிக் அகாடெமி வரை சென்று, அங்கிருந்து ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலையை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் குழாய் இடிந்து விழுந்த பகுதியில் சீரமைக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் கடந்த டிசம்பரில் தொடங்கியது. இப்பணி இதுவரை முடிவடையாமல் உள் ளது. அதனால் அப்பகுதி கடந்த 7 மாதங்களாக சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் பயன்பாடு இல்லாததால் அந்த சாலை, சரக்கு வாகனங்கள் நிறுத்து மிடமாகவும், கார் பழுது பார்க்கும் இடமாகவும் மாறி உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ‘‘ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியால், இப் பகுதியில் வசிப்போர் வாகனங் களை வீட்டுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சுந் தரி கூறும்போது, “பள்ளி வாக னங்கள் இந்த சாலையில் வருவ தில்லை. அதனால் விவேகானந்தா கல்லூரி அருகில் காத்திருந்து, குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

விவேகானந்தா கல்லூரி மாண வர் எம்.சுரேஷ் கூறும்போது, “முன்பு திரு.வி.க.நெடுஞ்சாலையில் பஸ் ஏறினால் சில நிமிடங்களில் ராயப்பேட்டையை அடைந்து விடுவோம். இப்போது பயண நேரம் அதிகமாகிறது” என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் சந்திரன் கூறும்போது, “இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் குறுக்கு வழியாக, தெருக்களில் எல்லாம் கார்களும், பைக்குகளும் இயக்கப்படுகின்றன. இதனால் தெருக்களில் போக்குவரத்து நெரி சல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்துள்ளன” என்றார்.

எம்எல்ஏ விளக்கம்

இது தொடர்பாக மயிலாப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் ஆர்.நடராஜிடம் கேட்டபோது, “மக்கள் புகார் தெரிவித்ததன் பேரில், அங்கு பார்வையிட்டேன். பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளேன்” என்றார்.

ஜூலைக்குள் முடியும்

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவ ரிடம் கேட்டபோது, “வெள்ளத்தின் போது, அந்த சாலையில் 120 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் குழாய் மற்றும் குழிகள் இடிந்து விழுந்தன. கடந்த டிசம்பரிலிருந்து ரூ.1 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரம் செலவில், புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 7 குழிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. 100 செ.மீ விட்டம் கொண்ட கழிவுநீர் குழாய்கள் தற்போது 55 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 65 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x