Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM

செயின் பறிப்பை தடுக்க முடியாமல் தவிக்கும் போலீஸ்: இணையதளத்தில் உலாவரும் காட்சிகளால் பரபரப்பு

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் செயின் பறிப்பு தொடர்பாக பல புகார்களை காவல் துறையினர் பதிவு செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை மாதவரம் புக்குராஜ் நகர் 3-வது தெருவில் வசிப்பவர் பொன்ராஜா. இவரது மனைவி ஜெபமணி, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜெபமணி அணிந்திருந்த 15 சவரன் செயினை பறித்துச் சென்றுவிட்டார். இந்த காட்சிகள் அங்கு ஒரு வீட்டில் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

இதேபோல கடந்த ஆண்டு ஜூலையில் கொளத்தூர் பிரதான சாலை சண்முகநாதன் நகர் முதல் தெருவில் நடந்து சென்ற சுமதி என்ற பெண்ணிடம், அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை மோட்டார் சைக்கிளில் வரும் இரு கொள்ளையர்கள் பறித்து செல்லும் காட்சிகள் அருகே ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.

தனியாக நடந்து வரும் அந்த பெண்ணை மிகுந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வரும் இரு நபர்களும் முதலில் நோட்டமிடுகின்ற னர். அந்த பெண்ணை தாண்டி மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கின்ற னர். பின்னர் ஆட்கள் நடமாட்டமில்லாத சரியான இடத்தை தேர்வு செய்து தெருவின் முனையில் வைத்து அந்த பெண்ணின் செயினை பறித் துக் கொண்டு எந்த பதற்றமும் இல்லாமல் செல்கின்றனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் இணையதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 6 மாதங்களுக்கு மேலாகியும் இது வரை இச்செயலில் ஈடுபட்ட குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

"புதிய குற்றவாளிகள்தான் இதில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் படித்த இளைஞர்களே இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர். மாணவர்கள் போர்வையில் இருக்கும் இவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்கின்றனர் போலீஸார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x