Published : 01 May 2014 10:27 AM
Last Updated : 01 May 2014 10:27 AM
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர் தல் வாக்குப்பதிவை வீட்டில் இருந்த படியே இன்டர்நெட் மூலமாக 11 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கும் இந்த வசதியை ஏற்படுத்தலாமா என்று தேர்தல் துறை பரிசீலித்து வருகிறது.
முதல் முறையாக….
தமிழகத்தில் முதல் முறையாக, வீட்டில் இருந்தபடியே தேர்தல் வாக்குப்பதிவினை இன்டர்நெட்டில் பார்க்கும் திட்டம் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக் குச்சாவடிகளில் 17,684 வாக்குச் சாவடிகளை வெப்-கேமரா (கம்ப் யூட்டரில் இணைக்கப்பட்ட கேமரா) மூலம் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் இருந்தே கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வசதியைப் பெற்றிருந்த வாக்குச் சாவடிகளை பொதுமக்களும் பார்க்க முடிந்தது.
பல ஆயிரம் பேர்
தேர்தல் நியாயமாகவும், நேர்மை யாகவும் நடத்தப்படுவதை, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகை யில், வாக்குப்பதிவை இன்டர் நெட் மூலமாக பார்த்து ரசிப்ப தற்கு தேர்தல் துறை ஏற்பாடு செய்தி ருந்தது. இந்த வசதியைப் பெறுவதற் காக, தேர்தல் துறையில் பதிவு செய்து கொள்வதற்கு வழிமுறை களும் அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வாக்களிப் பதற்குச் செல்ல முடியாதவர்களும், அந்த வயதை எட்டாத ஏராளமா னோரும் வீட்டில் இருந்தே தேர்த லில் பொதுமக்கள் வாக்களிப்பதை பார்த்து ரசித்துள்ளனர். தேர்தல் நடப்பதற்கு இரு தினங்கள் மட்டுமே இருந்த நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த குறுகிய இடைவெளி யிலும் பல ஆயிரம் பேர் பதிவு செய்து தேர்தலை இன்டர்நெட் மூலம் பார்த்து ரசித்தனர்.
இது குறித்து தேர்தல் துறை யினர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறிய தாவது:
கடந்த சட்டமன்ற தேர்தலில் 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப் பட்டன. இத்தேர்தலில் சுமார் 18 ஆயிரம் மையங்களில் கேமரா கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது. அதேநேரத்தில் பொது மக்களையும், வீட்டில் இருந்த படியே இன்டர்நெட்டில் வாக்குப் பதிவை பார்க்கச் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்காக 11 ஆயிரம் பேர் பதிவு செய்து தேர்தலை இன்டர்நெட் மூலம் பார்த்து ரசித்தனர். நாங்கள் கூடுதல் அவகாசம் அளித்திருந்தால், இன் னும் ஏராளமானோர் மனு செய்தி ருப்பார்கள்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத் திருப்பதால், வாக்கு எண்ணிக் கையையும் பொதுமக்களை பார்க்க வைக்கலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். எனினும் தேர்தல் ஆணையத்தை கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT