Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

4 மாவட்டங்களுக்கு காங். புதிய தலைவர்கள் - தங்கபாலு ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்

கோஷ்டிப் பூசல் காரணமாக தமிழக காங்கி ரஸில் தங்கபாலு ஆதரவாளர்களான மூன்று மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு, புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னைக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், கடந்த 12 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தென்சென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.கே.வெங்கட், முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் ஆதரவாளர் ஆவார். கடந்த 18-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த புதிய மாவட்டத் தலைவர்களுக் கான கலந்தாய்வுக் கூட்டத்தை வெங்கட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்து, தமிழக காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், தென்சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. தென்சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.வெங்கட் மாற்றப்பட்டு, கராத்தே தியாக ராஜன் மாவட்டத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். திருப்பூர் புறநகருக்கு கோபிக்கு பதிலாக ஏ.வெங்கடாசலம், திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு சுப.சோமுவுக்கு பதிலாக ஆர்.சி.பாபு அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏற் கெனவே அறிவிக்கப்படாத நாமக்கல் மாவட்டத் துக்கு செழியன், மாவட்டத் தலை வராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட் டுள்ள நான்கு மாவட்டத் தலைவர் களும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். மாற்றப்பட்ட மூன்று மாவட்டத் தலைவர்களும் தங்க பாலுவின் ஆதரவாளர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

கடந்த சட்டசபைத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே தியாகராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு சீட் தரப்பட்டது. பரிசீலனையின்போது ஜெயந்தி மனு நிராகரிக்கப்பட்டதால், மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த தங்கபாலுவே வேட்பாளரானார். ஆனால், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமியிடம் அவர் தோல்வியடைந்தார்.

தேர்தலில் தங்கபாலுவுக்கு எதிராக பணி யாற்றியதாகக் கூறி, கராத்தே தியாக ராஜன், இதாயத்துல்லா, ஜி.ஏ.வடிவேலு உள்ளிட்ட 19 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தங்கபாலு உத்தரவிட்டார். இப்போது கராத்தே தியாகராஜனின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

கராத்தே தியாகராஜன் கூறும்போது, ‘‘சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, மாவட்டத் தலைவராக என்னை நியமித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் மற்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நன்றி. இந்தப் பொறுப்புக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் வகையில், திராவிடக் கட்சிகளுக்கு இணையாக சென்னையில் காங்கிரஸை வளர்ப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x