Published : 02 Jan 2017 02:15 PM
Last Updated : 02 Jan 2017 02:15 PM
இளைஞர்கள் தடம்மாறுவதை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்க பயிற்சி அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் இம்மாவட்டத்தில் இரு சம்பவங்கள் பெரிய அளவில் இது தொடர்பாக நடந்துள்ளன.
ஆசிரியை தப்பினார்
சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை ஒருவர், காதலிக்க மறுத்ததால், அவரை கல்லூரி வாகன ஓட்டுநர் அரிவாளால் வெட்டினார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில் அந்த ஆசிரியை உயிர் தப்பினார்.
இளைஞர் கைது
இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒருதலைக் காதல் விவகாரத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி(20). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை நித்திரவிளை பூந்தோப்பு காலனியை சேர்ந்த பிஜூ காஸ்ரோ(27) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க அனுகென்சி மறுத்ததால், அவரை பிஜூ காஸ்ரோ கத்தியால் குத்தினார். காயமடைந்த அனுகென்சி சிகிச்சை பெற்று வருகிறார்.
நல்லொழுக்க பயிற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளி, கல்லூரிகளிலேயே நல்லொழுக்க பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கென தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT