Last Updated : 15 Jun, 2017 10:17 AM

 

Published : 15 Jun 2017 10:17 AM
Last Updated : 15 Jun 2017 10:17 AM

டாஸ்மாக் கடை திறக்கக்கோரி வழக்கு: மதுரையில் விநோதம் - வழக்கறிஞர் ஆணையர் ஆய்வுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், மதுரையில் ஒருவர் தனது சொந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த கடை விதிப்படி அமைந்துள்ளதா என ஆய்வு நடத்த நீதிபதி உத்த ரவி ட்டுள்ளார்.

தேசிய, மாநில நெடுஞ் சாலை களில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் 3000-த்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக புதிய இடங்களில் மதுபானக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

பல்வேறு ஊர்களில் புதிய இடங்களில் டாஸ்மாக் கடை திறக்க உயர் நீதிமன்றம் தடையாணை பிறப் பித்துள்ளது. இவ்வாறு மது விற்பனைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரை ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்த குமார் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நரசிங்கத்தில் உள்ள எனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் என்னை அணுகினர். அவர்களின் கோரிக் கையை ஏற்று ரூ.5 லட்சம் செலவு செய்து கட்டிடம் கட்டினேன். இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் சிலர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு நான் மறுத்துவிட்டதால் அவர்களின் தூண்டுதலின் பேரில் சிலர் டாஸ் மாக் கடைக்கு எதிராக போரா ட்டம் நடத்தினர். எனது இடத்தில் விதிகளுக்கு உட்பட்டே டாஸ்மாக் கடை கட்டப்பட்டுள்ளது. கடை திறக்கப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வரு கிறது. கடையை திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெ. நிஷாபானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலைக்கனி வாதிட்டார்.

பின்னர் மனுதாரர் இடத்தில் விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடை அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்தும், வழக்கறிஞர் ஆணையர் நேரில் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x