Published : 01 Mar 2017 10:32 AM
Last Updated : 01 Mar 2017 10:32 AM

உள்ளாட்சி: சாதனைப் பெண் ‘சவி’யை உங்களுக்குத் தெரியுமா?

தினசரி வரும் மின்னஞ்சல்களில் இளைஞர்களும் பெண்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும்; அதற்கான வழிகாட்டுதல் தேவை என்று கேட்கின்றனர். குறிப்பாக, பலர் தங்களது சொந்தக் கிராமத்தைப் புனரமைக்க விரும்புகிறார்கள். நேற்றைய தினம்கூட ஐ.டி. துறையில் பணியாற்றும் கமலக்கண்ணன் உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இளைஞர்களிடம் ஆர்வத்துக்கு இணையாக தயக் கங்களும் இருக்கின்றன. சவி ராஜா வத்துக்கும் அப்படிதான் இருந்தது. தயக்கங்களை உடைத்து களத்தில் குதித்தார், வென்றார். இன்று அவர் நாடே கொண்டாடும் இளம் பெண்மணி!

அது 2008-ம் ஆண்டு. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிர் அருகே இருக்கிறது டாங்க் மாவட்டம். சவி ராஜாவத்துக்கு வயது 30-ஐ தொட்டிருந்தது. எம்.பி.ஏ. முடித்துவிட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருந்தார். ஆனாலும் செய்யும் வேலை யில் அவருக்கு மனநிறைவு இல்லை. ஏதோ ஒன்று மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. முன்னதாக அவர் பத்திரிகையாளராக பணியாற்றி யிருந்ததால் அவருக்கு சமூகத்தின் மீது அக்கறை இருந்தது. குறிப்பாக, தனது சொந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தார். திடீரென்று ஒருநாள் உள்மனம் கட்டளையிடவே காரில் சொந்த கிராமத்துக்குக் கிளம்பினார்.

சவியின் சொந்த கிராமமான ‘சோடா’ ஜெய்ப்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது. தெருக்கள் எங்கும் சாக்கடை, புழுதி பறக்கும் மண் சாலைகள், வறண்ட நீர்நிலைகள், மண் வீடுகள் என ‘சோடா’ மாறவேயில்லை. குறிப்பாக கல்வியறிவில் மிக மோசமாக இருந்தது. அது ராஜஸ்தான் மாநி லத்தின் கல்வியறிவு சராசரியான 59.5 சதவீதத்தைவிட குறைவாக 53 சதவீதமாக இருந்தது. பெற்றோர் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தார்கள். ஆண் குழந்தை கள் கூலி வேலைக்குச் சென்றார்கள். எல்லாவற்றையும் மாற்ற நினைத்தார் சவி.

அங்கிருந்த பஞ்சாயத்து பிரதிநிதி களிடம் பேசினார். பழமையில் ஊறி யிருந்தவர்கள் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித் தார்கள். ஆனால், உள்ளூரில் தனது பால்ய நண்பர்களையும் பெண்களையும் திரட்டி தெருக்களில் ஓடும் சாக்கடையை சுத்தம் செய்வது, குடிநீருக்காக மனு எழுதிப் போடுவது, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று சிறு சிறு பணிகளை செய்துவந்தார் சவி. 2010-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ‘சோடா’ கிராமம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தான் போட்டியிடலாமா என்று உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்டார் சோடா.

ஊரே அதிர்ச்சியாக பார்த்தது. அங்கே ஊர்க் கட்டுப்பாடுகள் அதிகம். பெண்கள் பொதுவெளியில் செயல்பட கடுமையான கட்டுப்பாடுகள் இருந் தன. பஞ்சாயத்து பேசுவது, ஊரை விட்டு தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது என்று பழைய கட்டமைப்பு மாறாமல் இயங்கிவந்தது பஞ் சாயத்து நிர்வாகம். அதனால், ஊர்ப் பெரியவர்கள் சவியை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். அதே சமயம் இளைஞர்கள், பெண்கள் சவியை வரவேற்றார்கள். 2010-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வந்தது. சவி போட்டியிட்டார். பெரும்பான்மை வாக்குகளில் வென்றார். ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் இளம் பெண் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.

தேர்தலில் வென்றவுடன் முதல் வேலையாக பள்ளிக் கட்டிடங்களை மேம்படுத்தினார். ஊரில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வருவதைக் கட்டாயமாக்கினார். villagesoda.org என்கிற வலைதளத்தை உருவாக்கி, தனது கிராமத்தில் இருக்கும் தேவை கள், பிரச்சினைகள் குறித்து அதில் எழுதினார். வெளியேயிருந்தும் நிதி உதவிகள் கிடைத்தன. கிராமத்தில் மின்சாரம் பெரிய பிரச்சினையாக இருந்தது.

2010-ம் ஆண்டு நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே கிடைத் தது. சூரிய மின்விளக்கு திட்டத்தை செயல்படுத்தினார். மூன்று ஆண்டு களில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் மின்சாரம் கிடைத்தது. சோடா கிராமத்தில் 900 வீடுகளில் 800 வீடுகளுக்கு கழிப்பறைகளைக் கட்டி முடித்தார். அந்தக் கிராமத்துக்கே நீர் ஆதாரமாக இருந்த குளம், கடந்த 70 ஆண்டுகளாக வற்றிக் கிடந்தது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளத்தைத் தூர்வாரி சீரமைத்தார்.

வலைதளம் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு அந்தக் குளத்தை சீரமைத்தார். கிராமத்துக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைக் கொண்டுவந்தார் சவி. சொட்டு நீர் பாசனத் திட்டம் மூலம் வேளாண் மையை மேம்படுத்தினார். இப்பணி களின்போது சவால்களையும் சந்திக் காமல் இல்லை அவர். 2014-ம் ஆண்டு அரசின் நிதி உதவியுடன் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றை தனது கிராமத்தில் கொண்டுவர விரும் பினார். அதற்கான நிலத்தை கையகப் படுத்தும்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆனாலும், மீண்டு வந்தவர் அத்திட்டத்துக்காக தொடர்ந்து பணி யாற்றிவருகிறார்.

2015-ல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. மறுபடியும் வெற்றி பெற்றார் சவி. இவரது பணிகளை கேள்விப்பட்ட ஐ.நா. நியூயார்க்கில் நடந்த வறுமை தொடர்பான கருத் தரங்கில் பேச அழைத்து கவுரவித்தி ருக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு மனிதவள ஆற்றல் மேம்பாட்டுக்கான மாநிலப் பிரதிநிதியாக சவியை நியமித்திருக்கிறது.

“அரசியல் தலைவர்களும் அதி கார வர்க்கத்தினரும் கிராம மக்களின் துயரங்கள் குறித்து அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். அனைத் தையும் இணையமயமாக்க விரும்பும் ஆட்சியாளர்கள் கிராமங்களுக்கு நேரில் வந்து பார்த்துவிட்டு பின்பு கொள்கைகளை வகுக்க வேண்டும்...”

சமீபத்தில் மத்திய அரசுக்கு சவி விடுத்திருக்கும் செய்தி இது!

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x