Published : 10 Mar 2017 10:05 AM
Last Updated : 10 Mar 2017 10:05 AM
தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 16 மாவட்டங்களில் அரசு சார்பில் பழங்குடியினர் கலாச்சார பாரம்பரிய விழாக்களை, அரசு சார்பில் கொண்டாட மாவட்ட ஆட்சியர்களுக்கு பழங்குடியினர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 37 பிரிவுகளைச் சேர்ந்த 8 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின் றனர். அங்கீகாரத்துக்காக 2 லட்சம் பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர்.
குழந்தைகள் பிறப்பு முதல் இறப்பு வரை இவர்கள் வாழ்க்கையில் நடனங்களும், பாடல்களும் இருக்கும். திருமணம், சடங்கு, காதுகுத்து, கோயில் விழாக் கள் உள்ளிட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய தருணங்களில் இவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பாடல்கள், நடனங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். பொது வாக இவர்களின் நடனம் குழு நடனமாகவே இருக்கும்.
மண்ணின் மூத்த குடிமக்களான இந்த பழங்குடியின மக்களையும், அவர்களின் கலைகள், கலாச்சாரம் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஆகஸ்ட் 9-ம் தேதியை சர்வதேச ஆதிவாசிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து கொண் டாடி வருகிறது.
தமிழகத்தில் இந்த தினம் அரசு சார்பில் எல்லா மாவட்டங்களிலும் கொண்டாடப்படு வதில்லை. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டும் சர்வ தேச ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு, அரசும், சில தன் னார்வ அமைப்புகளும் சேர்ந்து பெயரளவுக்கு ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடி கலைந்து செல்வார்கள்.
வட மாநிலங்களில் ஆதிவாசிகள் தினத்தை அரசே மாநிலம் முழு வதும் விழாக்கள் எடுத்து கொண் டாடுகின்றன. அதுபோல், தமிழகத் திலும் அரசே ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு பழங்குடியின மக்கள் கலாச்சார விழாவை எல்லா மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராடி வரும் தன்னார்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது அவர்கள் கோரிக் கையை ஏற்று, தமிழக அரசு பழங் குடியினர் நலத்துறை அதற்கான நிதி ஒதுக்கி பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க ஒரு திட்டமாக தயாரித்து சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, நாமக்கல், திரு வள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கடலூர், மதுரை, அரிய லூர் ஆகிய 16 மாவட்டங்களில் பழங்குடியினர் கலாச்சார பாரம் பரிய விழாவை அரசு சார்பில் கொண்டாட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள் ளது. இதுகுறித்து ஆதிவாசிகள் முன்னேற்றத்துக்காகவும் உரிமைக் காகவும் போராடும் எக்தா பரிசத் அமைப்பின் ச.தனராஜ் கூறிய தாவது:
பழங்குடியின கலாச்சாரம், கலைகளைப் பாதுகாக்க அரசே பழங்குடியின மக்களுக்கான கலாச்சார பாரம்பரிய விழாக்களை நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த பட்டியலில் பழங் குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் விடுபட்டுள்ளன. இந்த மாவட் டங்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். இந்த விழாக்களை மார்ச் மாதம் ஏதாவது ஒரு நாளில் இந்த மாவட்டங்களில் ஆட்சியர் கண்காணிப்பில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஓரிரு நாள் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.
பழங்குடியின மக்கள் இது வரை தங்களுடைய மதிப்புமிக்க கலைகள், உன்னதமான வாழ்க் கையை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த கலாச்சார விழாக்களில் பழங்குடியின மக்கள் அரசு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. வெகுஜன மக்களின் கலைகள் மட்டுமே பொதுவெளி யில் பிரமிப்பாக காட்டப்படுகிறது. ஆனால், பழங்குடியின மக்களு டைய கலைகள், வாழ்க்கை முறையை சரியான புரிதல் இல் லாமல் மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது இவர் கள் கலைகள், கலாச்சாரம், வாழ்க்கை அரசு மேடையில் அங்கீ கரிக்கப்படுவதால் இவர்களைப் பற்றிய தவறான பார்வை, புரிதல் மாற்றப்படும். அரசு நலத்திட்ட உதவி கள், கல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT