Published : 30 Mar 2014 10:20 AM
Last Updated : 30 Mar 2014 10:20 AM

அன்புமணி உள்பட 3 பேர் மீது வழக்கு

தருமபுரியில் வன்முறையைத் தூண்டும் வகையில் சிடி-க்களை விநியோகம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். கடந்த சில நாள்களாக அவர் தருமபுரியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தருமபுரி அருகேயுள்ள ராஜாப்பேட்டை, குரும்பட்டி பகுதியில் பாமக-வினர் ஒரு சிடி-யை விநியோகம் செய்துள்ளனர். அதில், தருமபுரி மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதாக தருமபுரி வட்டாட்சியர் குணசேகரனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தருமபுரி நகர காவல் நிலையத்தில் வட்டாட்சியர் குணசேகரன் புகார் செய்தார். இதன்பேரில் நகர காவல் துறையினர், அன்புமணி ராமதாஸ், பாமக மாநில துணைப் பொதுச்செயலர் சரவணன், மாவட்டச் செயலர் அரசாங்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x