Published : 20 Mar 2014 05:37 PM
Last Updated : 20 Mar 2014 05:37 PM
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விருதுநகரில் மதிமுக பொதுச் செயலர் வைகோ போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, மதிமுக வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ உடனடியாக வெளியிட்டார்.
மதிமுக வேட்பாளர் பட்டியல் விவரம்:
விருதுநகர் - வைகோ
காஞ்சிபுரம் - மல்லை சத்யா
ஈரோடு - கணேசன் மூர்த்தி
தேனி - அழகு சுந்தரம்
ஸ்ரீபெரும்புதூர் - மாசிலாமணி
தூத்துக்குடி - ஜோயல்
தென்காசி - சதன் திருமலைக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT