Published : 28 Sep 2016 12:20 PM
Last Updated : 28 Sep 2016 12:20 PM

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி: அதிமுகவில் நான்கு பேருக்கு வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி த்தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவில் ஒரு ஆண், மூன்று பெண்கள் என நான்கு பேருக்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டின்படி திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பொது) என ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டு எஸ்.சி (பொது), மூன்று வார்டுகள் எஸ்.சி (பெண்கள்) என மீதமுள்ள வார்டுகள் பெண்கள் (பொது), என ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் வார்டு 18 எஸ்.சி (பொது) என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் ஆத்தூர் ஒன்றிய தலைவராக இருந்த பி.கோபி போட்டியிடுகிறார். பழநி ஒன்றியத்திற்குட்பட்ட 3 வது வார்டு எஸ்.சி., (பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் மகேஸ்வரி போட்டியிடுகிறார். திண்டுக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட 14 வது மாவட்ட கவுன்சிலர் வார்டு எஸ்.சி (பெண்) என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் விஜயலட்சுமி போட்டியிடுகிறார். நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 20 வது வார்டு எஸ்.சி (பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் முனீஸ்வரி போட்டியிடுகிறார். மொத்தமுள்ள மாவட்ட கவுன்சிலர்கள் 23 பேரில் அதிகப ட்சமாக அதிமு கவை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் எஸ்.சி (பொது) மற்றும் எஸ்.சி (பெண்) வார்டுகளில் போட்டியிடும் பி.கோபி, விஜயலட்சுமி, முனீஸ்வரி, மகேஸ்வரி ஆகிய நால்வரில் ஒருவர் மாவட்ட ஊராட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது.

இந்த நால்வரில் முதல்வாய்ப்பு ஆத்தூர் ஒன்றிய தலைவராக பதவி வகித்தவரும், கட்சியில் ஆத்தூர் ஒன்றிய பேரவை செயலாளராக பொறுப்புவகிப்பவருமான பி.கோபி க்கு அதிகம் வாய்ப்பு உண்டு என்றே தெரிகிறது. இதனால் இந்த 4 வார்டுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x