Published : 29 Jan 2017 09:18 AM
Last Updated : 29 Jan 2017 09:18 AM
நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் (டி.டி.சி.பி.) தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் சுமார் 80 சதவீத உயர் பதவிகள் காலியாக இருப்பதால், நகரங்களின் மாஸ்டர் பிளானை திருத்தி யமைக்கும் பணிகள் ஸ்தம்பித் துள்ளன.
ஒவ்வொரு நகரமும் வளர்ச்சி யடையும்போது அந்த நகரத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டம் திருத்தி அமைக்கப்படும். 20 முதல் 100 சதுர கிலோ மீட்டர் வரையிலான நகரங்களுக்கான திட்டம் ‘மாஸ்டர் பிளான்’ என்றும், நகரத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவது விரிவான வளர்ச்சித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சிகள் என 150 நகரங்களில் மாஸ்டர் பிளானும், சுமார் ஆயிரத்து 500 பகுதிகளில் விரிவான வளர்ச்சித் திட்டங்களும் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சென்னைக்கான மாஸ்டர் பிளானை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமும், மாநிலத்தின் இதர நகரங்களுக்கான மாஸ்டர் பிளானை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையும் மேற் கொள்கின்றன. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையைப் பொறுத்தவரை சென்னையில் தலைமை அலுவலகமும், 11 மண்டல அலுவலங்களும் உள்ளன. நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகங்களில் சுமார் 80 சதவீத உயர் பதவிகள் ஆண்டுக்கணக்கில் காலியாக இருப்பதால் நகரங்களுக்கான மாஸ்டர் பிளானை திருத்தி யமைக்கும் பணிகள் ஸ்தம்பித் துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:
நகர் மற்றும் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் ஒரு கூடுதல் இயக்குநர் பணியிடம், ஏழு இணை இயக்குநர், 14 துணை இயக்குநர், 10 உதவி இயக்குநர் பணியிடங்கள் என சுமார் 85 சதவீத உயர் பதவிகள் கடந்த 15 ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால் நகரங்களுக்கான மாஸ்டர் பிளானை திருத்தியமைக்கும் பணிகள் பாதித்துள்ளன. நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் திருத்தியமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.
மேட்டூர் நகருக்காக 1960-களில் உருவாக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இதுவரை திருத்தியமைக் கப்படவில்லை. கோவை மாநகருக்காக 1980-ல் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இந்த நகரத்துக்கான மாஸ்டர் பிளான் 1994-ல் திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்பட வில்லை. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களின் நிலையும் இதுதான். சென்னையைப் பொருத்த வரை சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மாஸ்டர் பிளானை உருவாக்கு கிறது. கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை மாஸ்டர் பிளான், 2013-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
150 வல்லுநர்கள்
ஆனால் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை. 2008-ம் ஆண்டுமுதல் 2013 வரை சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரமயமாகும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தற்போதைய நிலையில் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், தமிழ்நாடு முழுவதும் 150 தகுதியான நகரமைப்பு வல்லுநர் களை நியமிக்க வேண்டியதும் அவசர அவசியம்
இவ்வாறு சதானந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT