Published : 18 Apr 2017 08:57 AM
Last Updated : 18 Apr 2017 08:57 AM
தமிழகத்துக்கு அவமானத்தை தேடித் தந்துள்ளார் தினகரன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் அவர் கூறியதாவது:
இரட்டை இலை சின்னத்துக்காக தரகருக்கு பணம் கொடுத்ததாக, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கே அவர் அவமானத்தை தேடித் தந்துள்ளார். தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள், அதன் தலைவர்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக கூட்டிய கூட்டம் விவசாயிகளுக்கானது அல்ல. விரைவில் வர இருக்கும் தேர்தலை மனதில் வைத்து கூட்டணி அச்சாரத்துக்காக கூட்டப்பட்ட கூட்டம். வார்தா புயலின்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.768 கோடி நிவாரணமாக வழங்கியது. குடிநீர், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கி வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக அரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவசர நிலையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT